வீழ்வது வீழ்ச்சியல்ல
எடிசனி்ன் மனம் தளராமைத்தான்
மின் விளக்கை கண்டு பிடித்தது....
காந்தியடிகளின்
மனம் தளராமைத்தான்
சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தது...
அப்துல்கலாமின்
மனம் தளராமைத்தான்
அக்னி ஏவுகணையை உருவாக்கியது...
அம்பேத்காரின்
மனம் தளராமைத்தான்
அடிமைத்தனத்தை ஒழித்தது...
விழும்போதெல்லாம்
மனம் தளராதே.!
விழுந்தால்தான் எழ முடியுமென்று
மனதை வலிமையாக்கு...
தோற்கும் போதெல்லாம்
சோர்ந்து விடாதே!
தோற்கின்ற அளவுக்கு
உன் வெற்றி
உறுதி செய்யப்படுகிறதெனறு
தொடர்ந்து முன்னேறிச் செல்....
உதிர்ந்து விட்டது என்பதற்காக
செடி பூக்காமல் இருப்பதில்லை...
விழுந்து விட்டதற்காக
அலைகள் எழாமல் இருப்பதில்லை..
கிளைகள் வெட்டப்பட்டது என்பற்காக
மரங்கள் வளராமல் இருப்பதில்லை...
இது இயற்கையின்
" மகத்துவம் "அல்ல....
மனம் தளராதே என்று
இயற்கை
மனிதற்களுக்குச் சொல்லும்
"மகா தத்துவம்.....!!!"
படைப்பு
கவிதை ரசிகன்