சிறகுகளை விரி
தலைமைப்பண்பை வளர்த்துக்கொள்
தயங்கி தள்ளி நின்றுவிடாதே
மலை போன்ற மனவலிமைக்கொள்
மலைத்துப்போய் இறங்கி விடாதே
சூழ்ச்சிகளை வெல்லும் திறமைக்கொள்
முயற்சி என்னும் ஆயுதம் ஏந்திடு
புலம்பி கொண்டே இருக்காதே
புதிய பாதை ஒன்றை புகுத்திடு
வேகமாக ஓடிக் கொண்டிருக்காதே
விவேகம் கொண்டு செயல்படு
பதற்றம் அடைந்து மதி இழக்காதே
நிதானம் கொண்டு நிமிர்ந்து வாழ்
பிறர் வலியில் மனம் மகிழாதே
முடிந்தால் சிறு இரக்கம் கொள்
அசுரத்தன்மை அழித்திடு
அகண்ட அகிலத்தில் சிறகை விரித்திடு