உனக்குள் என் ஏணி
உங்களால் என்னை
பார்க்க முடிகிறதா....
இல்லையா?
இதைத்தான் நேற்றும்
அவர்கள் கூறினர்.
நாளை எவரேனும்
என்னை பார்த்தால்
அவர்களிடம் நீங்களே
சொல்லிவிடுங்கள்.
கனவில் வருவேன்
அது கனவென
நம்பவேண்டும்.
தென்படும் காற்றாகி
உடல் பாவும் வாசனையாக கூட...
கனவில் புள்ளிகளாக
நான் வருவேன்.
நீங்கள் பார்த்தால்
சொல்லிவிடுங்கள்.
என்னை நான்
பார்க்க வேண்டும்.
இனியும் நான்
அவர்களாக
இருக்க கூடாது...