காற்றில் கலந்த கந்தகம்
எங்கள் காலை விடியவே இல்லை
விழுந்தது அணுகுண்டு..
வீட்டின் கூறை மீது கல்லெறிவது போல் ஏவுகணைகள் எங்கள் நாட்டின் மேல்...
பால் அருந்தி பசியாறி படுத்துறங்கிய பிள்ளை எழவே இல்லை...
மழை தூரி விட்டது போல் கொட்டிய
குண்டு மழையில் சல்லடையானது
எங்கள் பூமி உமியாய் நாங்கள்...
கந்தகம் கலந்த காற்றால் சுவாசமே தனை ஆசுவாசப்படுத்த வழி தேடி ஓடுகிறது...
உடலில் ஓடவேண்டிய குருதி
வீதியில் ஓடி சாலைகளை சிவப்பாக்கி செல்கிறது...
துப்பாக்கி தோட்டாக்கள் தீரும் வரை சுட்டு தள்ளுங்கள் நாங்கள் மட்டும் ஏன் உயிரோடு அகதி என்ற அவபெயருடன்...
எந்த கோட்டையை கட்டிவிட போகிறீர்கள் எங்கள் நாட்டை துடைத்து...
பூகம்பம் வந்தால் புதைந்து விடும் அற்பமான வாழ்வில் எதை அடைய பார்க்கிறீர்கள்...
விஷமாக்கி விட்டீர்கள் காற்றையும்
எங்கள் பாசத்தை அடையாளம் காட்டி உயிர் துறந்த சிறுமி ....
என்ன செய்ய போகிறீர்கள் அந்த உயிரை பறித்து...
அனைவரும் மண்ணுக்கு தான் என்று அறியாத அறிவில்லாத மூடர்களே என்ன செய்ய போகிறீர்கள்...
காற்றில் கலந்த இந்த கந்தகம்
நமக்கும் தீங்கிழைக்க ஒரு நாழிகை போதும் பாதுகாப்பாய் இருந்திடுங்கள்.....