சுதந்திரம்

சாதி மதங்கள் ஆட்டிப் படைக்கும்
கலவரத் தீயாய் சுதந்திரம்
சின்னஞ் சிறுமியும் அஞ்சி நடுங்கும்
காமுகன் பார்வையாய் சுதந்திரம்
பிஞ்சு குழந்தைகளின் மரணத்தைக்
கொஞ்சமும் சட்டை செய்யா சுதந்திரம்
நியாயம் தவறிய தீயோர்க்கு
நீதியை வாரி வழங்கும் சுதந்திரம்
வலியோர் விதைத்த வறுமையில்
எளியோர் தொலைக்கும் உடமைகளில்
கிளர்ச்சி தடுக்கும் அடக்குமுறையில்
எங்கும் மகிழ்ந்து தவழுது சுதந்திரம்...
சிந்தனை வீரர்கள் உதிரம்
சிந்தி மகிழ்ந்தது இதை பெறவா?
கயவர்கள் மட்டும் ஆள் மாறி
காட்சிகள் மாறா நிலை பெறவா?
இடிகுரல் கேளா ஆழ்குளத்து மீனாய்
இனியும் காலம் கழித்திட நினைக்கும்
அடிமை உள்ளம் அனைத்திற்கும்
"சுதந்திர" தின வாழ்த்துக்கள்