கவிதை எழுதுகின்ற நேரம்

சின்ன ஒளியொன்று மெல்ல சுடராகி
ஜீவன் எங்கும் பாயும்...
அன்பு மொழியொன்று அழகின் வழியாகி
உள்ளம் எங்கும் சூழும்...

கண்ட காட்சியொன்று கவிதை உருவாகி
கற்பனை எங்கும் சுழலும்...
தூவல் இதழொன்று தூவிய முத்தமாகி
காதல் எதிலும் மலரும்...

அது என்ன நேர்கிறது என்றுணர முடியாது
உள்ளம் மகிழ்கின்ற நேரம்..!!
கவிதை எழுதுகின்ற நேரம்,
அது தமிழவள் காதல் புரிகின்ற நேரம்...!!

எழுதியவர் : லோகேஷ் நாகராஜன் (30-Nov-17, 10:43 am)
சேர்த்தது : லோகேஷ் நாகராஜன்
பார்வை : 147

மேலே