மௌனகவி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மௌனகவி |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 104 |
புள்ளி | : 8 |
ஒரு நாள்!
ஒரு திருமண அழைப்பிதழில்!
நமது இருவர் பெயரும் !
இடம் பெற்றது!
மையத்தில் மணமகளாய் நீ!
மேலுறை மேல்!
பெறுநராய் நான்!
என்றோ ஒரு நாள்!
உன்னை நான் பார்த்தேன்!
காதல் பார்வையில்!
இன்று தான்!
முதன் முதலாய் பார்க்கிறேன்!
உன்னை நான் !
ஒரு குழந்தையின் தாயாக!
அன்று ஒரு நாள்!
உன் காதல் சிரிப்புக்காக!
காத்திருந்தவன்!
இன்று உன் குழந்தையின்!
புன்னகையை அள்ளிச் செல்கிறேன்!
நாம் காதலை கடந்து செல்லும் முன்!.
அது நம்மை கடந்து சென்று விடுகிறது!
காதலிகளை நாம் கண்டுகொள்ளும் முன்!
அவர்கள் காதலர்களை கண்டுகொள்கிறார்கள்!
காதலிகளை எளிதாக கண்டு கொள்ளலாம்!
காதலை எளிதாக கண்டு கொள்ள முடியாது!
சமைந்த மனம்!
வானில் பறவை!
பறக்க நினைக்கும்!
சமையா மனம்!
நாவின் சுவைக்கு!
சமைக்க நினைக்கும்!
சிறந்த கவிதை ஒன்றை எழுதுவதற்கு முன்!
எந்த ஒரு சிறந்த கவிதையையும் வாசித்து விடக்கூடாது!
சிறந்த கவிதை ஒன்று எழுதப்பட்ட பின்!
அது சுவாசிக்கப் படாத காற்றைப் போல!
வாசகர் வாசிக்காத பக்கங்களில்!
வாசம் செய்கிறது!
உன்னதமான காதல் ஒன்று! உடல்கள் உரசும்போது!
உடைவது போல்!
அது முதல் வாசகரின் முதல் வாசிப்பில் உடைந்து விடுகிறது!
சிறந்த கவிதை என்பது!
இதுவரை யாராலும்!
வாசிக்கப்படவும் இல்லை!
எழுத படவும் இல்லை!
அது எல்லோருள்ளும் தேடப்படுகிறது!
வெகுதூரங்கள் கடந்த பின்பும்!
நெடுங்காலங்கள் கழிந்த பின்பும்!
மனதின் ஓரம்!
ஓர் துளியாய்!
உறைந்து நிற்கும் உன் நினைவு!
பெருங்கடலாய் உருகும் போது!
அலைகள் கரைக்கும்!
மணற்சிற்றில் நான்!