தேடப்படுகிறது

சிறந்த கவிதை ஒன்றை எழுதுவதற்கு முன்!

எந்த ஒரு சிறந்த கவிதையையும் வாசித்து விடக்கூடாது!

சிறந்த கவிதை ஒன்று எழுதப்பட்ட பின்!

அது சுவாசிக்கப் படாத காற்றைப் போல!

வாசகர் வாசிக்காத பக்கங்களில்!

வாசம் செய்கிறது!

உன்னதமான காதல் ஒன்று! உடல்கள் உரசும்போது!
உடைவது போல்!

அது முதல் வாசகரின் முதல் வாசிப்பில் உடைந்து விடுகிறது!

சிறந்த கவிதை என்பது!

இதுவரை யாராலும்!

வாசிக்கப்படவும் இல்லை!

எழுத படவும் இல்லை!

அது எல்லோருள்ளும் தேடப்படுகிறது!

எழுதியவர் : மௌனகவி (27-Sep-20, 12:05 pm)
சேர்த்தது : மௌனகவி
Tanglish : thedappadukirathu
பார்வை : 2054

மேலே