SPB
---
நீ தொட்ட உயரமும்..
நீ காட்டிய பணிவும்..
உச்சியில் இருக்கும்
யாவருக்கும் உதாரணம்..
நேற்று வரை நீ பாடிய
பாடல்களில் எல்லாம்
நாயகன் பாடியதாய்
எங்கள் காதுகளில் கேட்டது..
இன்று என்னவோ நீ பாடிய
பாடல்களில் எல்லாம்
நாயகன் யாரிருப்பினும் உன்
குரல் தனியே கேட்கிறது..
நேற்று வரை நீ பாடிய
ஆனந்த கீதமெல்லாம்
பேரானந்தம் தந்தது..
இன்று என்னவோ நீ பாடிய
அவ்வானந்த கீதம் கூட
அழுகை வர வைக்கிறது..
பல மொழியில் உன் குரலால்
அகிலத்தை ஆனந்தமாய்
இருக்க செய்த உன்
ஆன்மா சாந்தியடையட்டும்..
-----------
சாம்.சரவணன்

