அள்ளிச் செல்கிறேன்
என்றோ ஒரு நாள்!
உன்னை நான் பார்த்தேன்!
காதல் பார்வையில்!
இன்று தான்!
முதன் முதலாய் பார்க்கிறேன்!
உன்னை நான் !
ஒரு குழந்தையின் தாயாக!
அன்று ஒரு நாள்!
உன் காதல் சிரிப்புக்காக!
காத்திருந்தவன்!
இன்று உன் குழந்தையின்!
புன்னகையை அள்ளிச் செல்கிறேன்!