நாசுகார்த்தி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நாசுகார்த்தி
இடம்:  நாரேரிக்குப்பம் , பெரமண்ட
பிறந்த தேதி :  12-Nov-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Nov-2015
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  4

என்னைப் பற்றி...


இணையதள நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் ,

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ரெட்டணை மதுரை, நாரேரிக்குப்பம் கிராமத்தில் சுந்தரராஜன் * விசாலாட்சி இவர்களுக்கு புதல்வனாக 1977 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி பிறந்தேன்,

ரெட்டணை ஆங்கிலப் பள்ளியிலும் அரசுப் பள்ளியிலும் எட்டாம் வகுப்பு வரை படித்தேன்,

பள்ளிப் பருவத்தில் கல்வியில் நாட்டம் இல்லாமல்
எட்டாம் வகுப்போடும் முடித்துக் கொண்டேன்

சென்னைக்கு ஒரு வேலை விஷயமாக வரும் பொழுது, பேருந்தில் பெண்களைக் கேலி செய்கிறார்கள் என்று சிலர் முணுமுணுக்க என் காதில் விழுந்தது,

அன்று என் சிந்தனைக்கு எட்டிய சில வரிகளை நான் எழுதினேன்,
எழுதியதை திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி பேராசிரியராக இருந்த பா கல்யாணி அவர்களிடம் காண்பித்தேன்,
அடடா அருமை தம்பி இதுதான் கவிதை என்று எனக்கு தன்னம்பிக்கையும், உந்துதலையும், கொடுத்தார்,

அன்று முதல் நான் கவிதை எழுதத் தொடங்கினேன்,
என் கவிதைத் தொகுப்புகள் அத்தனையும் படித்துவிட்டு கவிஞரும் பாடலாசிரியருமான கலைக்குமார் அவர்கள் உங்களை நா.சு.கார்த்திக் என்று அழைப்பதை விட,
பெண்ணியக்கவிஞர் நா சு கார்த்தி என்று அழைக்கலாம் என்று கருத்துரைத்தார்

அப்படி என் கவிதைகளில் பெண் முன்னேற்றம் பெண் விழிப்புணர்வு பெண்ணுக்காக முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தது,

1997 ஆண்டு முதல் சிறு சிறு கவிதைகள் எழுத ஆரம்பித்தேன்,

என்னுடைய எழுத்துக்கள் சிலரால் பாராட்டப்பட்டவை இருந்தாலும் என் எழுத்துக்களை பிழைகள் அதிகம் இருக்க வாய்ப்பு இருக்கிறது,

நான் கற்றது எட்டாம் வகுப்பு மட்டுமே, அதனால் என்னவோ தமிழ் எனக்கு அவ்வளவாக எழுத்துப் பிழை இருக்கிறது ,

ஆனால் கவிதை எழுதக்கூடிய ஆர்வமும் ஆற்றலும் எனக்கு அதிகம் இருக்கிறது கவிதை வரிகள் புரியக்கூடிய ஆற்றல் என்னிடத்தில் இருக்கிறது

பாமரன் கவிதைகள் என்கிற ஒரு தொகுப்பு புத்தகம் போடுவதற்காக15 ஆண்டுகளுக்கு முன்பாகவே தயாரித்து வைத்திருந்தேன்,

என்ன செய்வது என்னிடத்தில் பணம் இருப்பு இல்லாததால் புத்தக வெளியிடுவதில் சிரமம் ஏற்பட்டு விட்டது,

இப்பொழுது (பாமரன் கவிதைகள்) என்ற தலைப்பில் மூன்று பகுதிகளாக போடக்கூடிய அளவிற்கு கவிதைகள் என்னிடத்தில் இருக்கிறது,

வெளியிடுவதற்காக முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன்,

என்னுடைய இந்த கவிதைத் தொகுப்புக்கு கவிஞரும் பாடலாசிரியருமான காதல்மதி அவர்கள் அணிந்துரையும்

கவிஞரும் பாடலாசிரியருமான கலைக்குமார் அவர்கள் என்னுடைய கவிதைகளுக்கு கருத்துரையும் வழங்கி இருக்கிறார்கள்,

புத்தகம் வெளியிடுவதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறேன், என் படைப்புக்கள் புத்தகவடிவில் விரைவில் வெளிவரும் நீங்கள் எல்லாம் எதிர்பார்க்கலாம்,

மேலும் பல கவிதைகள் நான் தினத்தந்தி தினமணி கல்கண்டு குமுதம் மற்றும் பல இதழ்களிலும் மற்றும் இணையத்தளங்களிலும் வெளியிட்டுக் கொண்டு இருக்கிறேன்,

என் கவிதைத் தொகுப்புக்கு உங்களுடைய பேராதரவை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறேன்,

உங்கள் கருத்துக்களும் உங்கள் விமர்சனங்களை நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்,

என்றும் அன்புடன் தோழமையுடன்

நா,சு,கார்த்திக்... ✍

என் படைப்புகள்
நாசுகார்த்தி செய்திகள்

யார் கண்ணு பட்டுச்சோ ஐயோ யார் கண்ணு பட்டுச்சோ கவிதை 

மேலும்

நாசுகார்த்தி - நாசுகார்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Mar-2016 10:54 am

புதுமைப்பெண்கள்

*நாங்கள் காலில் மிதிபடும் பூக்களல்ல----

கழுத்தில் சூடிக்கொள்ளும் மாலைகள்!

*நாங்கள் எண்ணைய்யூற்றி ஏற்றும் தீபங்களல்ல----

என்றுமே ஒளிவீசிக்கொண்டிருக்கும விடிவெள்ளிகள்!

*நாங்கள் கோரமாய் வீசும் புயல்களல்ல---

இதமாயவீசும் தென்றல்!

*நாங்கள வெப்பக்கனல்களல்ல---

நிழல் தரும் மரங்கள் !

*நாங்கள் வளைந்து விழும் கொடிகளல்ல---

நிமிர்ந்து நிற்கும் தாங்கிகள்!

*நாங்கள் அடுப்படி ராணிகளல்ல---

கார்முகில் விமானம் வரை ஓட்டவரும் புதுமைப்பெண்கள்!

ஆமாம் நாங்கள் புதுமைப்பெண்கள்.

மேலும்

நாசுகார்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2016 10:54 am

புதுமைப்பெண்கள்

*நாங்கள் காலில் மிதிபடும் பூக்களல்ல----

கழுத்தில் சூடிக்கொள்ளும் மாலைகள்!

*நாங்கள் எண்ணைய்யூற்றி ஏற்றும் தீபங்களல்ல----

என்றுமே ஒளிவீசிக்கொண்டிருக்கும விடிவெள்ளிகள்!

*நாங்கள் கோரமாய் வீசும் புயல்களல்ல---

இதமாயவீசும் தென்றல்!

*நாங்கள வெப்பக்கனல்களல்ல---

நிழல் தரும் மரங்கள் !

*நாங்கள் வளைந்து விழும் கொடிகளல்ல---

நிமிர்ந்து நிற்கும் தாங்கிகள்!

*நாங்கள் அடுப்படி ராணிகளல்ல---

கார்முகில் விமானம் வரை ஓட்டவரும் புதுமைப்பெண்கள்!

ஆமாம் நாங்கள் புதுமைப்பெண்கள்.

மேலும்

நாசுகார்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2016 10:49 am

விவசாயி மனசு

விதைக்கும் பொழுது

கொஞ்சம்

நடும் பொழுது

கொஞ்சம்

இடையில்

கொஞ்சம்

வாங்கிய பணமெல்லாம்

வடடியும் முதலுமாய்

அறுவடைக்குப்பின்

அடைத்துவிட்டு

ஏதுமில்லாமல் நிற்கும் பொழுது

ஏரெடுக்க நினைக்கும்

விவசாயி மனசு.

மேலும்

எழுத்து அளித்த போட்டியை (public) திருமூர்த்தி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்

போட்டி தலைப்புகள்:

வின் ஞானம்
அரும்புகள்
மகிழ்ச்சியின் முயற்சி
உரிமைகள் பறிக்கப்படும்
மீண்டும் மீண்டும்

மேலும்

போட்டி முடிவுகள் எண்ணம் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-Dec-2015 4:42 pm
போட்டியின் முடிவுகள் என்று வெளிவரும் 18-Dec-2015 4:28 pm
போட்டியை அறிவிப்பதும் ஆனால் முடிவுகளை அறிவிக்காமல் காலம் கடத்துவது..அல்லது அதை அப்படியே மறந்துவிடுவது என்பது இணையங்களில் சமீப காலமாக நிகழ்ந்துவரும் கொடுமை. கவிதை எழுதுபவர்கள் வேலைவெட்டி இல்லாதவர்கள் என்றும் போட்டிகள் எனும் பெயரில் அவர்களின் உணர்வுகளை எப்படி வேண்டுமானாலும் சிதைத்து அழிக்கலாம் என்றும் இணையத்தளம் நடத்துபவர்கள் நினைக்கிறார்கள். கவிஞர்களின் திறனை வளர்க்க போட்டி நடத்துவது சரி. ஆனால் ...அதே சமயம் போட்டி முடிவுகளுக்காக அதில் கலந்து கொண்டவர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள் என்கிற எண்ணம் தங்களுக்கு இல்லாதது வருத்தம் தருகிறது. எழுத்து போன்ற தளத்திற்கு இது அழகல்ல. நிர்வாக காரணங்களின் பொருட்டு இந்த தாமதம் ஏற்பட்டு இருப்பின் அதை அறிவிப்பாய் தளத்தில் வெளியிட்டிருக்கலாமே... பதினைத்து நாட்கள் ஆகியும் போட்டியாளர்களுக்கு முடிவு பற்றி எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தது நீங்கள் அவர்களின் மன உணர்வினை மதிக்க மறந்ததால்தான் என்று தோன்றுகிறது. எதிர்காலத்திலேனும் போட்டி அறிவிப்பதில் காட்டும் அதே ஆர்வத்தினை முடிவுகளை அறியத்தருவதிலும் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வருத்தங்களுடன் புதுவைப்பிரபா 16-Dec-2015 4:59 am
வின் ஞானம் என்றால் என்ன? 15-Dec-2015 7:34 pm
நாசுகார்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2015 2:29 pm

வாய்விட்டுட் சிரித்தேன்..

நோய்விட்டு போகவில்லை

அதிகமானது பசி நோய்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

என் படங்கள் (1)

Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே