விவசாயி மனசு

விவசாயி மனசு

விதைக்கும் பொழுது

கொஞ்சம்

நடும் பொழுது

கொஞ்சம்

இடையில்

கொஞ்சம்

வாங்கிய பணமெல்லாம்

வடடியும் முதலுமாய்

அறுவடைக்குப்பின்

அடைத்துவிட்டு

ஏதுமில்லாமல் நிற்கும் பொழுது

ஏரெடுக்க நினைக்கும்

விவசாயி மனசு.

எழுதியவர் : பெண்ணியக்கவிஞர் நா.சு.கார (11-Mar-16, 10:49 am)
சேர்த்தது : நாசுகார்த்தி
Tanglish : vivasaayi manasu
பார்வை : 67

மேலே