கோவமும் மன்னிப்பும்
நதி போல ஓடும் வாழ்வில்
உள்ளத்தின் உணர்வை எழுப்பி
துன்பம் என்ற வடுக்களை
உருவாக்குவது கோவம்
தடங்களை நீக்கி மகிழ்சியை
உருவாக்கும் சாதனமாக
இருப்பது மன்னிப்பு
ஒவ்வொருவரின் வீட்டின்
வாசல் வழியில் தன்னை அறியாம்மல்
உறவுகளின் உறவை உடைத்து
கொண்டு இருக்கும் மூலம் கோவம்
உடைந்த உறவுகளின்
இதயங்களை ஒன்றிணைக்கும்
வழி பாதையாக இருப்பது மன்னிப்பு
கோவம் உள்ள மனமும்
மன்னிப்பு இன்றி வாழும் மனமும்
வெளிச்சம் தோன்ற முடியாத இரவுகள்