கோபிநாதன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கோபிநாதன் |
இடம் | : திருவண்ணாமலை |
பிறந்த தேதி | : 07-May-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 121 |
புள்ளி | : 11 |
என் பிறப்பின் அர்த்தத்தை உலகிற்கு உணர்த்த முயல்வேன் ...
அன்பே உருவான காதல் - இது
ஆழம் மிகுந்த காணல்
இனிமை நிறைந்த கூடல் - மனம்
ஈகை அறிந்த கோணல்
உண்மை உறவின் சாரல் - மகிழ்
ஊக்கம் மிஞ்சும் ஆடல்
எத்துணை துன்ப வாடல் - வலி
ஏதும் அறியா தோணல்
ஐயம் அகன்ற கயல் - அவள்
ஒருவளே எனதுடன் தோல்
ஓடும் தனிமை வாடல் - பிணி
ஔடதம் நீக்கும் ஊடல்
அஃதே வளர்க நம் காதல்....
விழியாலே கணை தொடுத்து
இதயமதில் குடி பெயர்ந்து
உயிரான விலைமிகு உறவிதுவோ - இல்லை
விடியலில் கண்டிட்ட வெறும் கனவோ...
வான் அது தொடு தூரத்திலே
வெறும் நாள் பல தனிமை கூடத்திலே
கனவின் உச்சம் பகலிலுமே - அதன்
நீண்ட பயணம் தொடர்கிறதே....
காணொளி கண்டு வியக்கின்றேன் - அதில்
காண்பது நீ என நினைகின்றேன்
ஏனோ என் நிலை இந்நிலையோ
இதுவோ காதலின் உரைநிலையோ...
நம் தேசம் போற்றுவோம்,வளர்போம் (மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி )
போற்றி புகழாரம் சூடி கொண்டாட
நம் நாடு பல தியாகிகள் -கண்
கண்ட வெறும் கனவா...
குருதி பெருக்கெடுத்தும் போர்களத்தில்
மானம் காத்த பெண்மை, - இன்று
கூறுபோட்டு மாயும் நாய்களின் வேட்டையா...
வளமிகு நம்நாட்டின் தரம் குறையசெய்யும்
அந்நிய முதலீட்டின் மூலதனநிலை
இன்னும் தொடருதல் வேண்டுமா...
சூழ்நிலை கைதியாய் சுருண்ட மா...மனிதா
ஈனபிறவி இது உண்மை., இல்லையெனில்
ஆறாம் அறிவை ஆயுதமாய் எடு
மோக போதைதனில் தெளிந்து எழு...
தூய்மை நாடு இதனை இயற்கை எழிலுடன்
வரும்கால சந்ததிக்கு, வி
ஆதலினால் காதல் செய்வீர் (மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி)
இளைய சமுதாயமே காதல் செய்வீர்!
காலம் கரைந்து கடமை மறந்து
இளமை துள்ளிட காதல் செய்வீர்!
பெற்றவன் மனம் குளிர
உற்றான் உறவி, நல் வசை பாட
ஊர் பேர் நாறி- ஊர் விட்டோடி
ஊர் சுற்றி திரிய உன்னதமாய் காதல் செய்வீர்!
பருவம் கடக்கும் முன்னே
பரதேசியாய் வேடமிட்டு, -பட்டனி
கோலத்திலே படைத்தவன் பரிதவிக்க
கையில் கொண்ட காசு கரையும் முன்னே காதல் செய்வீர்!
கா...தல், சாதி மத பேதமின்றி பக்குவமிக்க
வயதிருந்தால் அன்புமிக்க இதயமதில்
வித்திட்டு வளரும் இன்பமான விருட்சம் அதுவே காதல்
உணரும்