நம் தேசம் போற்றுவோம்,வளர்போம் மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி
நம் தேசம் போற்றுவோம்,வளர்போம் (மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி )
போற்றி புகழாரம் சூடி கொண்டாட
நம் நாடு பல தியாகிகள் -கண்
கண்ட வெறும் கனவா...
குருதி பெருக்கெடுத்தும் போர்களத்தில்
மானம் காத்த பெண்மை, - இன்று
கூறுபோட்டு மாயும் நாய்களின் வேட்டையா...
வளமிகு நம்நாட்டின் தரம் குறையசெய்யும்
அந்நிய முதலீட்டின் மூலதனநிலை
இன்னும் தொடருதல் வேண்டுமா...
சூழ்நிலை கைதியாய் சுருண்ட மா...மனிதா
ஈனபிறவி இது உண்மை., இல்லையெனில்
ஆறாம் அறிவை ஆயுதமாய் எடு
மோக போதைதனில் தெளிந்து எழு...
தூய்மை நாடு இதனை இயற்கை எழிலுடன்
வரும்கால சந்ததிக்கு, விட்டு செல்ல வினைகிறேன்
விருப்பம் கொள்வீரோ, விலகி செல்வீரோ, போகட்டும்
இவ் உன்னத தேசத்தில் சீர்கெடுக்கும், - உன்பங்கை
மட்டும் இனி நிறுத்தி(திருத்தி)கொள்
எச்சரிக்கிறேன் நானும் இந்தியனே....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
