ஆதலினால் காதல் செய்வீர் மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

ஆதலினால் காதல் செய்வீர் (மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி)

இளைய சமுதாயமே காதல் செய்வீர்!
காலம் கரைந்து கடமை மறந்து
இளமை துள்ளிட காதல் செய்வீர்!

பெற்றவன் மனம் குளிர
உற்றான் உறவி, நல் வசை பாட
ஊர் பேர் நாறி- ஊர் விட்டோடி
ஊர் சுற்றி திரிய உன்னதமாய் காதல் செய்வீர்!

பருவம் கடக்கும் முன்னே
பரதேசியாய் வேடமிட்டு, -பட்டனி
கோலத்திலே படைத்தவன் பரிதவிக்க
கையில் கொண்ட காசு கரையும் முன்னே காதல் செய்வீர்!

கா...தல், சாதி மத பேதமின்றி பக்குவமிக்க
வயதிருந்தால் அன்புமிக்க இதயமதில்
வித்திட்டு வளரும் இன்பமான விருட்சம் அதுவே காதல்
உணரும் நோக்கமெனில் - காதல் செய்வீர்!

உண்மை உறவுகளை இழக்கும் தருணத்தில்
வலியாகி ரணமாகி இதமாகி
மௌனமாய் கதறும் நிலை,
ஆ...தலினால் உணர்வுடனே காதல் செய்வீர்! காதல் செய்வீர்!

எழுதியவர் : கோபிநாதன்.கு (8-Feb-15, 4:32 pm)
சேர்த்தது : கோபிநாதன்
பார்வை : 440

மேலே