ஆதலால் காதல் செய்வீர் மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

அகிலம் சென்று ஆராய்ந்து பார்
சனநாயக சக்தி நம் அளவிற்கு வலிமை உண்டோ ?
மதம் என்றும் சாதி என்றும் பிரிவிருந்தும்
சகோதர பாசம் நம்மில் குறைந்ததுண்டோ ?

தாய் மொழி தமிழ் மொழி முன்
வந்த முன் மொழி என்று எதுவும் உண்டோ ?
பெண்ணையும் நாட்டு மண்ணையும்
தாயென்று பார்க்கும் சமூகம் தரணியில் உண்டோ ?

கலாச்சார கண்ணியம் என்று
என் தேசம் போல் உலகில் எங்கும் உண்டோ ?
இளைய சமுதாய வலிமை கொண்டு நாம்
வல்லரசாவதை தடுக்க வழிதான் உண்டோ ?

பகை நாடு சுற்றி பத்து இருந்தாலும் நம்மோடு
பகையோடு போர் செய்ய துணிச்சல் உண்டோ?
பலம் மிக்க பாதுகாப்பு நம்மிடம் இருந்தும்
பாசம் கொண்டு பழகும் தோழமை குறைந்தது உண்டோ?

குறை இல்லா வீடும் இல்லை
குறைகள் இல்லாமல் நாடும் இல்லை
என்ன குறை இருந்தாலும் நம் நாடு
ஆதலால் காதல் செய்வீர் !!!

எழுதியவர் : கார்த்திக் (8-Feb-15, 4:32 pm)
பார்வை : 104

மேலே