காதல் இதுவோ

விழியாலே கணை தொடுத்து
இதயமதில் குடி பெயர்ந்து
உயிரான விலைமிகு உறவிதுவோ - இல்லை
விடியலில் கண்டிட்ட வெறும் கனவோ...

வான் அது தொடு தூரத்திலே
வெறும் நாள் பல தனிமை கூடத்திலே
கனவின் உச்சம் பகலிலுமே - அதன்
நீண்ட பயணம் தொடர்கிறதே....

காணொளி கண்டு வியக்கின்றேன் - அதில்
காண்பது நீ என நினைகின்றேன்
ஏனோ என் நிலை இந்நிலையோ
இதுவோ காதலின் உரைநிலையோ...

எழுதியவர் : கோபிநாதன்.கு (14-Feb-15, 10:50 am)
பார்வை : 82

மேலே