அ முதல் அஃது வரை காதல் - இன்னும் சற்று நொடிகளில் - போட்டிக்கவிதை

அன்பே உருவான காதல் - இது
ஆழம் மிகுந்த காணல்
இனிமை நிறைந்த கூடல் - மனம்
ஈகை அறிந்த கோணல்
உண்மை உறவின் சாரல் - மகிழ்
ஊக்கம் மிஞ்சும் ஆடல்
எத்துணை துன்ப வாடல் - வலி
ஏதும் அறியா தோணல்
ஐயம் அகன்ற கயல் - அவள்
ஒருவளே எனதுடன் தோல்
ஓடும் தனிமை வாடல் - பிணி
ஔடதம் நீக்கும் ஊடல்
அஃதே வளர்க நம் காதல்....