காக்கைச் சிறகினிலே- இன்னும் சற்று நொடிகளில் - போட்டிக்கவிதை
காக்கைச் சிறகினிலே- இன்னும் சற்று நொடிகளில் - போட்டிக்கவிதை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊற்றின் உறக்கத்தால்
எரிந்த நிலங்கள் கட்டிடமாக
கசிகிறது குடிநீர் கழிவறையிலும் ..!
வாய்மை வறட்சியில்
சட்டம் உடுத்திய உடைகள்
உயிரைப் பிடுங்கும் பிணங்கள் ..!
கவர்ச்சிக் காட்சியில்
திரைகள் திரட்டும் கலைகள்
திறமையைத் தகர்த்தப் பிழைகள் ..!
தடித்த தங்கத்தில்
கல்வியைத் திணித்த வியாபாரம்
மூளையைப் பிழியும் கருவிகள் ..!
தானியம் தவிர்த்த
துரித உணவின் உள்வாங்கல்
உயிர்த்துளி ஓட்டத்தின் அமிலங்கள் ..!
உயர்தரச் சிகிச்சையால்
உறைந்துப் பிரிந்த உயிர்கள்
உதிரம் உமிழ்ந்த உணர்வுகள் ..!
வனத்தை அழித்து
பசுமை விரட்டிய உடல்கள்
சுவாசம் சுரண்டும் விரல்கள் ...!
உயிர்க்கொல்லி ஊட்டலில்
முரணாய் முளைக்கும் விளைச்சல்
சந்ததி அழிக்கும் அணுக்கள் .....!
- இராஜ்குமார்