காக்கை சிறகினிலே இன்னும் சற்று நொடிகளில் போட்டி கவிதை

பசலை நோய்படர உனைவிட்டு வந்தேனே,
வசமாக மாட்டிக்கிட்டு வெந்தனலில் நொந்தேனே.
மொழியும் புரியவில்லை.வழியும் தெரியவில்லை.
விழியில் நீர்வழிய உனைவிலக்க முடியவில்லை.
வின்முட்டும் கட்டிடங்கள் வீதியெல்லாம் இருக்குது.
கண்கொண்டு பார்க்கத்தான் பாவிமனம் மறுக்குது.
பார்க்கும் இடமெல்லாம் நீயாக இருக்க,
தாக்கும் உன்நெனப்ப எப்படிதான் விலக்க.
கடைசியா கை ஆட்டி அழுதுஅனுப்பிவச்ச,
அந்த நொடி என்னைவிட்டு போகாம நிக்குதடி.
நெருஞ்சிமுள்ளாக என்நெஞ்ச தைக்குதடி.
அறைஎன்னும் சிறையில தனிமை வாட்டுது.
தரைதிரைசேலையெல்லாம் உன்முகத்தை காட்டுது.
நீ ஊட்டிவிட்ட சாப்பாடு இன்னும் செரிக்கவில்லை.
காற்றிலே மிதந்தபோதும் மனம் அதில் லயிக்கவில்லை.
எந்திரமாய் இருக்கிறேன்.
சந்திரனாய் கறைகிறேன்.
என்று உனை கான்பேனோ? அனுஅனுவாய் இறக்கிறேன்.
அன்பே அனுப்பிவிடு எனக்கு ஒரு ஓலை.
வம்பே வேண்டாமடி,இனி வெளிநாட்டு
வேலை.

எழுதியவர் : கு.தமயந்தி (15-Feb-15, 12:42 pm)
பார்வை : 104

மேலே