காக்கைச் சிறகினிலே - “இன்னும் சற்று நொடிகளில் - போட்டிக் கவிதை”

பூக்காரியின் மேசையில்
பூக்கள் சிரிக்கின்றன
அழகு மலர்களின்
அணிவகுப்புகளுக்கு இடையே
பூக்காரியின் வாழ்க்கையும்
அடங்கி இருக்கிறது

விற்கப்படும் பூக்களின் மூலமே
வாங்கிக் கொள்கிறாள் வாழ்க்கையை

பெண்கள் பூ வாங்கும்போது
இயல்பாய் இருக்கும் இவள் மனது
ஆண்கள் பூ வாங்கும்போது
அதனை சூடிக்கொள்ளும்
பெண்களை நினைத்து
பெருமைப்பட்டுக்கொள்ளும்

மிஞ்சிய மலர்களை
கொண்டுவாமா என்று
கெஞ்சிய மகளின் வார்த்தைகள்
நெஞ்சில் நிழலாடுகின்றன

மங்கிய மாலைப் பொழுதில்
உதிரிப் பூக்களை ஒன்று சேர்க்கிறாள்
மலர்களின் மகிழ்ச்சியை
மகளின் மனதில் விதைக்க

காக்கைக்கு தன் குஞ்சு
பொன் குஞ்சு

எழுதியவர் : ஆ.ஜான் பிராங்ளின் (15-Feb-15, 12:41 pm)
பார்வை : 99

மேலே