சமூகம் -காக்கைச் சிறகினிலே - இன்னும் சற்று நொடிகளில்-உதயா
![](https://eluthu.com/images/loading.gif)
அநியாயம் தலை விரித்து
...............ஆடுகிற சமூகத்தில்
ஆண்டவனே வந்தாலும்
...............அடிமை வாழ்வு நிச்சயம்
இரக்க குணமில்லாத மனித
...............அரக்கர்கள் வாழும் உலகினில்
பெற்றவராய் இருந்தாலும்
...............அநாதை வாழ்வு நிச்சயம்
காசு பணமில்லாத
...............மனிதன் இங்கு நாய்தான்
காசுப் பணமிருந்தால்
...............நாயும் இங்கு கடவுள்தான்
அன்புமும் நல்குணமும் இல்லாத
...............முட்கள் வாழும் உலகமிது
பூவாய் பெண்ணும் கிடைத்துவிட்டால்
...............கிழிந்த துணியாய் போவது நிச்சயமிது
புனித உலகம் மறைந்தும்
...............அன்பு சமூகம் மறைந்தும்
யுகங்கள் கடந்துப் போயின
...............யுகங்கள் அழிந்தேப் போயின
பண்பு பாசம் மறைந்தும்
...............பண்பாடு கலாச்சாரம் அழிந்தும்
பாரோ பட்டற்றுப் போனது
...............பாரோப் பட்டமரமாய் போனது