காக்கைச் சிறகினிலே - இன்னும் சற்று நொடிகளில் - போட்டிக்கவிதை

நாயகனாய் என்
இதயமதை நிறைத்தாயடா நீ!
இடறி இடம் மாறித்
துடிக்கிறது உன்னால் என்னிதயமது!

ஆட்கொண்டாயடா உன் அதிசயக்
கருமையால்!
கண்களில் காதல் வழிந்தோடுதடா,
அன்பில் உருகி உடைந்தே
போனதடா உடலின் நிறையும்!

நாளும் பொழுதும் உன்னினைவில்
மயங்குதடா என் உணர்வு!

உதிரம் கடந்து ஊடுருவுதடா
உன் முகம் !

இதயம் கிடந்தது துடிக்குதடா-உன்
ஒற்றைப்பார்வையில்!

ஊரெங்கும் உறங்கையில் என்
இரவு மட்டும் உனைத் தேடுதடா!

உயிர்சிலிர்க்க வைத்திடும்-உன்
உயிர் முத்தம் வேண்டுதடா -என்
உள்ளம் முழுமையும்!

என் கருங்குழல் கோதிட - உன்
குழலை யாசிக்கும்
பேதையடா நான்!

உடன்போக்கில் உள்ளம் நிறைந்திட
உயிர் தந்து உறவாடிட வாராயோ என் கண்ணா!

காத்திருக்கிறேன் உனக்காய்
காக்கைச் சிறகினிலே
நீர்த்துளியாய்!
உன் தாகம் தீர்க்கவே!

எழுதியவர் : பபியோலா (15-Feb-15, 12:09 pm)
பார்வை : 114

மேலே