அரூபன்ராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அரூபன்ராஜ் |
இடம் | : திருவாரூர் |
பிறந்த தேதி | : 04-Jan-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 6 |
உண்மையான அன்பிற்கு
வார்த்தைகளே தேவை
இல்லை மௌனம்
ஒன்றே போதும்
நினைவுகளாக
புதைந்து கொள்ள
புதுவரவுகளில்
பிடித்தப் பாடலாய்
இணைந்துக் கொள்ளும்
அவன் பேச்சு...!!
விசேசங்களில்
போடும் மொக்தூளாய்
வண்ணம் மாற்றும்
அவன் பார்வை...!!
ஐஸ் வண்டிகளில்
ஒலிக்கும் மணியாய்
கவனம் ஈர்க்கும்
அவன் பைக் சத்தம்...!!
திருவிழாவிற்கு
கலையும் தூக்கமாய்
விழிக்க வைக்கும்
அவன் ஞாபகம்...!!
வார இறுதிகளில்
அம்மாவின் ஞாயிறாய்
தவிர்க்க முடியாதது
அவன் நினைவுகள்...!!
வேர்களில்
பற்றிடும் தாய்மண்ணாய்
உரிமைக் கொள்ளும்
அவன் கோபம்...!!
குழந்தைகள்
கேட்கும் பொம்மையாய்
மறுக்க முடியாதது
அவன் பிடிவாதங்கள்...!!
மலராத
பூக்களின் நிறமாய்
அழகான இரகசியம்
அவன் முழுக்கை
மடிப்புகள்...!!
என் கண்களின் ஓரம் ஈரம்
உன் நினைவுகளால்
வந்த பாரம்...
ஆயிரம் முறை அவமானபட்டாலும்
அடங்க மறுக்கும் -என்
இதயத்திற்கு எப்படி சொல்லி
புரியவைப்பேன்
இனிமேல்
அவள் மாற்றான் தோட்டத்து
மல்லிகை என்பதை...
ஆயிரம் முறை அவமானபட்டாலும்
அடங்க மறுக்கும் -என்
இதயத்திற்கு எப்படி சொல்லி
புரியவைப்பேன்
இனிமேல்
அவள் மாற்றான் தோட்டத்து
மல்லிகை என்பதை...
என் கண்களின் ஓரம் ஈரம்
உன் நினைவுகளால்
வந்த பாரம்...
அடி மீது
அடி வைத்து வரும்
அடியே
அடியேனை
ஒருமுறையாவது
'சைட்'
அடியேன்...