டோடோ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : டோடோ |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-May-2015 |
பார்த்தவர்கள் | : 58 |
புள்ளி | : 3 |
ஒளிப்பதிவாளர் செழியனின், சுதேசமித்ரனின் சினிமா பற்றிய கட்டுரைகளில் மயங்கி..rnrnடோடோ என்ற பெயரில் ஆங்கிலத்தில் சினிமா, திரைப்பாடல்கள் பற்றியநான் முயற்சி செய்த 100+ பதிவுகள் இங்கே. http://www.pixmonk.in/ rnrnஒரு வேளை இது கவிதையாக இருக்குமோ [ அங்க தான் ஆரம்பிச்சுது வெனை :) ] என்றெண்ணி பதிவு செய்ய ஆரம்பித்தது இங்கே. http://roughnote.pixmonk.in
https://www.facebook.com/pixmonkin
புள்ளி வைத்து கம்பிக்கோலம்
போடுவதை போல
பாடம் படித்தபடி நெருக்கமாக
மல்லிப்பூ கட்டுவதைப்போல
நெயில்பாலிஷ் வைத்து
ஊதிவிடுவதைப் போல
கண்ணாடியில் பார்க்காமலே
கம்மல் மாற்றுவதைப் போல
நெற்றிப் பொட்டை கண்ணாடியில்
ஒட்டுவதைபோல
விரலில் அதிகமான
மையை முடியில்
தடவுவது போல
எவ்வளவு இயல்பாக சொன்னாய்
உனக்கு திருமணம்
நிச்சயிக்கப்பட்டு விட்டதை.
புள்ளி வைத்து கம்பிக்கோலம்
போடுவதை போல
பாடம் படித்தபடி நெருக்கமாக
மல்லிப்பூ கட்டுவதைப்போல
நெயில்பாலிஷ் வைத்து
ஊதிவிடுவதைப் போல
கண்ணாடியில் பார்க்காமலே
கம்மல் மாற்றுவதைப் போல
நெற்றிப் பொட்டை கண்ணாடியில்
ஒட்டுவதைபோல
விரலில் அதிகமான
மையை முடியில்
தடவுவது போல
எவ்வளவு இயல்பாக சொன்னாய்
உனக்கு திருமணம்
நிச்சயிக்கப்பட்டு விட்டதை.
வாழ்ந்து கெட்டு,
வறுமையிலிருக்கும்
ஜமீன் குடும்பத்து
கடைசி வாரிசைப் பார்ப்பது
போல இருந்தது..
ஒரு பக்கம்
ராசி எலக்ட்ரிக்கல்ஸ்
மறு பக்கம்
மணி மெட்டல்ஸ்
விளம்பரம் போட்ட,
பலகை உடைந்து,
தேங்காய் நார் பிய்ந்த
சீட்டோடு,
ஆளில்லாமல்,
ஒரே ஒரு சைக்கிள்
ரிக்ஷாவை பார்த்தபோது.
வாழ்ந்து கெட்டு,
வறுமையிலிருக்கும்
ஜமீன் குடும்பத்து
கடைசி வாரிசைப் பார்ப்பது
போல இருந்தது..
ஒரு பக்கம்
ராசி எலக்ட்ரிக்கல்ஸ்
மறு பக்கம்
மணி மெட்டல்ஸ்
விளம்பரம் போட்ட,
பலகை உடைந்து,
தேங்காய் நார் பிய்ந்த
சீட்டோடு,
ஆளில்லாமல்,
ஒரே ஒரு சைக்கிள்
ரிக்ஷாவை பார்த்தபோது.
முன் சீட்டில்
உட்கார்ந்தவள்
என்னோடு ஏதும் பேசாத
வேளையில்
அவள் காதில் ஆடிய
ஜிமிக்கியுடன் பேசியபடி
போனது
என் பயணம்.
முன் சீட்டில்
உட்கார்ந்தவள்
என்னோடு ஏதும் பேசாத
வேளையில்
அவள் காதில் ஆடிய
ஜிமிக்கியுடன் பேசியபடி
போனது
என் பயணம்.