இய‌ல்பாக‌

புள்ளி வைத்து க‌ம்பிக்கோல‌ம்
போடுவ‌தை போல‌


பாட‌ம் ப‌டித்த‌ப‌டி நெருக்க‌மாக‌
ம‌ல்லிப்பூ க‌ட்டுவ‌தைப்போல‌


நெயில்பாலிஷ் வைத்து
ஊதிவிடுவ‌தைப் போல‌


க‌ண்ணாடியில் பார்க்காம‌லே
கம்ம‌ல் மாற்றுவ‌தைப் போல‌


நெற்றிப் பொட்டை க‌ண்ணாடியில்
ஒட்டுவ‌தைபோல‌
விர‌லில் அதிக‌மான‌
மையை முடியில்
த‌ட‌வுவ‌து போல‌

எவ்வ‌ள‌வு இய‌ல்பாக‌ சொன்னாய்
உன‌க்கு திரும‌ண‌ம்
நிச்ச‌யிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌‌தை.

எழுதியவர் : டோடோவின் ரஃப் நோட்டு (22-May-15, 4:30 pm)
பார்வை : 146

மேலே