காதலின் இரண்டாம் நிலை

என் காதல் விண்ணப்பம்
உன்
கடைகண் பார்வையால் ஏற்றுகொள்ளப்பட்டது...
ஆம்
உன் ஓர பார்வை ஓராயிரம் அர்த்தங்கள்
சொன்னது என் மனதில்...
இந்த இதய தொடர்புதான் - காதலில்
இரண்டாம் நிலை.....

உன் பார்வைக்கும் என்
இதயத்திற்கும் பாலம் தோன்றியது!
என் நட்பு வட்டத்தின் மைய புள்ளி
உன்னால் இரண்டானது!

என் மனம் உன்னை
தேக்கிகொள்ள அணை கட்ட தொடங்கியது.....
தமிழில் சொற்களை தேடினேன்
நீ என்னை மீண்டும் மீண்டும் தேடுவதற்காக...........

நம் காதல் அலை எழுவதற்காக
உறுதியான கரை எழுப்பினேன்,
இதயத்தில் கரை கட்டுவதுதான்
காதலின் இரண்டாம் நிலை ......................

என்றும் அன்புடன்
அ மனிமுருகன்

எழுதியவர் : (22-May-15, 3:51 pm)
பார்வை : 103

மேலே