காதலின் முதல் நிலை

நன்றாக என்னை தெரியும்
எனக்கு - நான் யாரென்று.........
பருவத்தின் மாற்றம் என்னை
நிலவை ரசிக்க சொன்னது,
காதலின் முதல் நிலை
இதுதான் என்று எனக்கு தெரியவில்லை...
காரணம்
கண்ணாடி என் தோழன் ஆனது!
சீப்புக்கும் இப்போது சிறகு முளைத்தது!
உன் வருகைக்காக
என் கண்களின் கருவிழி சுழலாமல் நின்றது!
நண்பர்களின் வட்டத்தில்
மையத்தில் நின்றேன் - உன்
பார்வை படுவதற்காக........
இப்படி
உன் பார்வை படாத முதல்நிலை
உயிர் சேரா உணர்வுகளாக என்னுள் தொடர்ந்தன....................
என்றும் அன்புடன்
அ.மனிமுருகன்