காதலின் மூன்றாம் நிலை
நான் காதலின்
காந்தமாகிறேன் - உன்னை
பிரியாமல் இருக்க !
இந்த மூன்றாம் நிலை தான்
முழு மதி வளரும் நிலை.........
மூச்சு கற்றும் முள்ளாய்
உள் வரும் நிலை ...........
என் முதல் கவிதைக்காக -உன்
மோதிர விரல் என்னை தீண்டியது,
அந்த கவிதைக்கு கொடுத்தேன்
என் முதல் முத்தத்தை...............
நடக்கும் போது கை கோர்த்தோம்,
நகைபிற்க்கு பின் அமைதியானோம் ,
நாட்களை நம் விழி அசைவில் நகர்த்தினோம்,
நம்பிக்கை நம்மில் வளரந்தது
முழு மதியாய்................மூன்றாம் நிலையில் ................
என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்