எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஜாதி மதம் என்று கடவுள் ஏற்படுத்தாத வித்தியாசத்தை நீ மற்றவர்களிடத்தில் பார்க்கிறாய் என்றால் நீ உன் கடவுளை வழித்தொடரவில்லை என்பது தான் அர்த்தம்.

மேலும்

நீ கடவுளிடத்தில் கேட்கும் நேரத்தில் கடவுள் உன்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்

மனிதன்: கடவுளே எனக்கு உதவுவீர்களா
(கடவுள்: நீ மற்றவர்களுக்கு உதவ தயாரா?)

மேலும்

மனிதன் உருவாக்கிய ஜாதி மதங்கள் மனிதானாலே அழிந்து போகும். கடவுள் உருவாக்கிய அன்பு என்றும் அழிந்துபோவதில்லை.

மேலும்

நட்பு தான் கடவுளின் குணம். அன்பு தான் கடவுளின் செயல். நீ தினம் தினம் பார்க்கும் ஒவ்வொருவரின் உருவம் தான் கடவுளின் உருவம். அவர்களிடம் கடவுளை காண்பதும் காணாததும் உன் பார்வையின் விதத்தை பொருத்தது.

மேலும்

என்றாவது ஒருநாள் கடவுள் நிரூபித்து விடுவார் நான் உங்களுக்கு தான் சொந்தமே தவிர மதங்களுக்கு இல்லையென்று.

மேலும்

கடவுளை வணங்கும் எண்ணம் கொண்ட எவரும் மதங்களை முன்னிலைப் படுத்துவதில்லை நாம் மதங்களை முன்னிலைப் படுத்தும் பட்சத்தில் கடவுளை தள்ளி வைக்கிறோம்.

மேலும்

கடவுளும் குழம்பிப் போயிருப்பார் அவருக்கு நாம் வைத்திருக்கும் பெயர்களைக் கேட்டும் அவரை பிரித்து வைத்த மதங்களைப் பார்த்தும் ஒருவனே தெய்வம் என்றிருக்க மதங்கள் மட்டும் ஏன் இத்தனை.

மேலும்

உன் மதத்தையும் ஜாதியையும்இறுகப் பிடித்துக் கொள்ளாதே உன் நட்பை இழந்து விடுவாய் நட்பை இறுகப் பிடித்துக் கொண்டு உன் மதத்தையும் ஜாதியையும் இழந்து விடு அவை நீ உருவாக்கியதல்ல.

மேலும்

உனக்குள் மதங்களும் ஜாதிகளும் மறந்து ( மறைந்து ) போகும் நீ நண்பனாகும் போது.

மேலும்

எழுத்துக்களால் வருணிக்க முடியாத நட்பை வாழ்ந்து காட்ட விரும்புகிறேன்.

மேலும்

மேலும்...

மேலே