எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
உந்தன் கை கோர்த்து👫 நடக்கயிலே விழித்து இருந்த விழிகள்... (த தமிழ்வாணன் கல்லூர்)
10-Sep-2020 11:37 am
உந்தன் கை கோர்த்து👫 நடக்கயிலே
விழித்து இருந்த விழிகள்
இமை மூடியதோ என்று எண்ண
மெய் மறந்தேன்
வீதில் நடக்கின்றன 🚶♂️அல்ல
விண்ணில் மிதக்கின்றன 🏂
என்று அறியா நிலை தொட
நீ என்னை பற்றி👫 செல்கின்றாய்
பாதை மாறிவிடாமல் பத்திரமாக
அன்பெனும்💑 அறைவனைப்போடு
ஏர் பூட்டி ஊழுது விதைத்து விட்டோம் இனி விடிந்து விடும் வறுமை
என்று எண்ணி வியர்வை சிந்தி உழைத்திடும் உழவன் விடியலை நோக்கி
கதிரவனின் வருகை முன் கழனி சென்று கடும் உழைப்பை தந்து பசியாற வீடு திரும்பும் உழவனுக்கு கால் வயிறு கஞ்சியே மிஞ்சும்
வாங்கிய கடனும் வறுமையின் நிலையும் மாறிவிடும் காலம் கை
கூடி வந்ததே என்று மனம் நிறைய மகிழ்ந்த உழவனுக்கு
மாற்றம் வந்தது இயற்கை சீற்றம் என்னும் வடிவில் கனவெல்லாம் கரைந்தது கடும் மழையில்
கடனை எண்ணி மனம் கனத்த உழவன் மரணமே விடியல் என்று எண்ணி மாய்த்து கொண்டான் உயிரை
வறுமையின் அருமை இளமையில் அறிந்தால் வாழ்வின் இனிமை முழுமை... (த தமிழ்வாணன் கல்லூர்)
29-Aug-2020 2:20 pm
வறுமையின் அருமை இளமையில் அறிந்தால்
வாழ்வின் இனிமை முழுமை அடைவதில்லை
காதலில் மட்டும் அல்ல கல்வியிலுதான்
கல்லூரியின் வாசல் தொடுவதில்லை
காதல் தேசத்தில் சென்று கவிதை எழுதுவதில்லை
காத்திருந்து காலத்தால் காதல் கனிந்தாலும்
குடும்ப நிலை அறிந்து கடல்தாண்டா நினைக்கையில்
காத்திருந்து வந்த காதலை கை கழுவும் நிலைதான்
வானில் பறந்து வேற்று மண்ணில் வசித்து
வியர்வை சிந்துகின்றேன் வறுமையை போக்கிட
இளமை தொலைந்ததே என்று என்னும் போது குடும்பம் வறுமை ஒழிந்ததே என்று மனம் மகிழ்கிறேன்