சியாத்- கருத்துகள்

தூற்றுவோர் தூற்றட்டும், போற்றுவோர் போற்றட்டும் நான் பாண்டவர்களுக்காக நீதியையும் தர்மத்தையும் விற்க துணைபோகமாட்டேன். தர்மத்தையும், சத்தியத்தையும் நஞ்சூட்டிக் கொல்ல மாட்டேன். சத்தியமே என் பாதை, உண்மையை உலகிற்குப் புரியவைப்பதே என் சேவை. என்னோடு கைகோர்த்தாலும்சரி, என்னைக் கைவிரித்தாலும் சரி. உண்மையை உரைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் நண்பர்களே.

”வேலைக்காரிக்குப் பிள்ளையின் சாட்டு” இது எங்க ஊர் மொழி.
அதுபோல உண்மையை அறியா மானிடரே! வாய்மையே வெல்லும் என்பதை அறியமாட்டாயா?.... வாய்மை என்பது வாய்ப்பேச்சில் மட்டுமிருந்த கன்னனே செயலில் காட்டாதபோது, இன்னொருவனுக்குச் சொந்தமான அரசாட்சியை தட்டிப் பறிக்க நினைக்கின்ற ஒழுக்கமில்லாமல் பிறந்த பாண்டவர்களுக்கு எப்படி முடியும்??

உண்மையை அறியுங்கள்....... நலமாக வாழுங்கள்

கருணையுடன்
சியாத்

தையலே, நான் சவால் விடுகின்றேன்....... நீங்கள் ஒரு சரியான தீர்க்கமான நீதமான தர்மமான் ஒழுக்கமான வீரமான ஆளாக இருந்தால், எனது கேள்விகளுக்கு ஆதாரத்துடன் பதில்களைத் தாருங்கள்? அல்லது என்னோடு விவாதத்திற்கு வாருங்கள் முடிந்தால்..... இதைவிட உங்களுக்குச் சொல்லுவதற்கு ஏதுமில்லை.

நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். உங்களால் முடிந்தால் வீரமிருந்தால் துணிச்சல் இருந்தால் என் கேள்விகளுக்கு பதிலைத் தாருங்கள். அல்லது என்னோடு வார்த்தைக் கணைகளைத் தொடுங்கள். துரியோதனனின் அம்புகளுக்குச் சக்தி இருக்கின்றதா? அல்லது கன்னனின் சரங்களுக்குத் துணிச்சல் இருக்கின்றதா? சொற் சிலம்புகளுடன் ஆடிப்பார்ப்போம் துணிவிருந்தால் எதிர்த்து நில்லுங்கள்....

இது உங்களுக்கு மட்டுமல்ல, கன்னன், குந்தி எனும் மந்தி, பாண்டுவினால் பெறப்படாத அநீதியில் சமர் செய்கின்ற அதர்ம வாதிகளான பாண்டவர்கள் போன்றவர்களை போற்றுகின்றவர்கள் வரட்டும் நாம் ஆதாரத்துடன் விவாதிப்போம்.

கருணையுடன்
சியாத்

ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி என்று உரைப்பதுபோல் இருக்கிறது உம் வாசகம்.

”குருடனின் மகன் குருடன்தானே” என்று வீரத்திருமகன் துரியோதனனைப் பார்த்து இகழ்ந்துரைத்தாள் காம மதுவில் கரைந்திருந்திரக்கின்ற மாது திரௌபதி. இது உங்களின் மனக்கண்களுக்கு வரவில்லையா தோழியே......ஆனால் விதுரன் யாரின் மகன்? தாதியின் மகன்தானே? துரியோதனன் பொய் உரைக்கவில்லையே..... தான் கற்று ஒரு மேதை ஆகிவிட்டால் தான் ஒரு தாதியின் மகன் என்பதை மறந்து விடுவதா? இவ்வாறு தன்னை தாதியின் மகன் என்று கூறுவது விதுரருக்கு இழுக்காகுமோ?? இங்கே பதவிவெறியும் கற்ற கல்வியும் தான் ஒரு தாதியின் மகன் என்பதை மறக்கடித்து விட்டதோ? இவர்கள்தான் தாயை மதிப்பவர்களோ? இவர்கள்தான் தர்மத்திற்காக போராடுபவர்களோ? இவற்றை எண்ணும்போது ஏளனமாக இருக்கிறது நண்பியே...

அரச நியதிப்படி திருதராஷ்டிரனின் மகனான துரியோதனுக்குத்தான் அரச கிரீடம் அணிவிக்கப்படவேண்டும். அதன் பிறகுதான் பாண்டுவின் மகனுக்கு அரசாட்சி. இதுவே அரச நீதியும், தர்மமும் அக்கால உண்மையும். ஆனால் பாண்டுவிற்கு பிள்ளைகள் இல்லை....... எனினும் பெண் எனும் போர்வைக்குள் ஒழிந்திருக்கின்ற அரக்கி குந்திக்கு கர்ணண் உட்பட 6 புதல்வர்கள்.

எனவே, பாண்டுவிற்குப் புதல்வர்கள் இல்லாததால் அரசாட்சி சட்டப்படியோ, தர்மப்படியோ எம் வள்ளல் துரியோதனனுக்குத்தான். இதில் யாருக்கும் சந்தேகமே இல்லை தோழி.... இது உலகமே ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மை-யதார்த்தம். இதில் மறுப்பு இருந்தால் செப்பு நங்கையே......

நரபலிக்கு நாள் குறித்துக் கொடுத்தாலும் அந்நாளை இந்நொரு நாளாக்கி சூரியனையும் சந்திரனையும் ஒன்றாக்கி உலகத்தை ஏமாற்றி உவகையில் உருண்டான் கன்னன். அன்றே உலகத்தில் சத்தியத்திற்கு அழிவுகாலம் ஆரம்பித்தது. உண்மைக்கு அஸ்த்தமனம் உருவானது. நீதியும் அழிந்தது.

உண்மை சாகாது தோழியே.... நாட்களை நீட்டிச் சென்றாயினம் வாய்மையே வெல்லும்.

மஹாபாரத்தில் தன்னிகரில்லா தலைமகன் துரியோதனனே சிறந்தவன், அவனே அறத்தின் மறு உருவம் என்பதெல்லாம் உங்களுக்குப் புறிந்தும் உமது அகங்காரம் அவற்றை ஏற்க மறுக்கிறது. நீ நீதியையும், தர்மத்தையும், கலாச்சாரத்தையும், பெண்மையையும் போற்றும் ஒரு பெண்மணியாக இருந்தால் கௌரவர்களுக்கே கௌரவத்தைக் கொடுப்பாய்.......

கருணையுடன்
-சியாத்-

வடமொழியில் வான்மீகி எடுதிய இராமாயனத்தை தமிழுக்குச் சுபைபட தொகுத்துத் தந்தவர் கவிச் சக்கரவர்த்தி கம்பர். வடமொழியில் இராமனுக்கு வான்மீகி கொடுக்காத பல பெருமைகளை தமிழிலே கம்பர் மிகைப்படுத்தியிருக்கிறர்.

இராமனைப் புகழ்ந்தும், இராவணனை இகழ்ந்தும் பழி தீர்த்திருக்கின்ற கவிஞர், உண்மைகளை மறைத்து நீதியை நிலைநாட்ட மறந்திருக்கிறார். ஆயினும் கவிஞரின் சில பிதட்டல்களால் உண்மை, உலகிற்கு புலனாகிவிட்டது.

மறைந்திருந்து தாக்கிக் கொல்கின்ற கோழைத்தனமானது இராமனின் வீரம்.
ஆனால் தேவர்களுடனும் நேருக்கு நேர் நின்று சமர் செய்கின்ற வீரமகன்தான் இராவணன்.

வீரத்திலும், நேர்மையிலும் தன்னிகரி்ல்லா தலைமகன் இராவணன்தான் என்பது இராமனே அறிந்த உண்மை.

கருணையுடன்
-சியாத்-

சுபசெல்வி......
மஹாபாரதம் பற்றிய என் கருத்துச் சிசுக்களை ஒருமுறை உம் சிந்தையினால் தடவிக்கொள்.... அப்போது உணர்வாய் தர்மம் குடியிருக்கின்ற நீதியான கோயில் எங்குள்ளது என்பதை......

விளக்கம் வேண்டுமானாலோ... சந்தேகம் இருந்தாலோ.... தாராளமாக உம் கருத்துக்களை முன்வைக்கலாம் அதனை நான் வரவேற்கின்றேன்.

கருணையுடன்
சியாத்

என் வார்த்தைகளின் சில வழுக்கள் உன்னில் வடுக்களை ஏற்படுத்தியிருக்கலாம் அவற்றிற்காக நான் வருந்தி மன்னிப்புக் கேட்கின்றேன் நண்பனே......

நான் ஒருபோதும் உம்மில் கோபம் கொள்ளவில்லை. அவை விவாதத்தின் சில விழுமியங்கள் என்பதால் சில சொற் சிலம்புகளைக் கொண்டு உம் உணர்வுகளுடன் விளையாடிவிட்டேன் அது உம்மைக் காயப்படுத்தும் வேலாகக் கருதவில்லை தோழனே. அதற்காக நான் மீண்டும் வருந்துகின்றேன்.

மஹாபாரத உண்மைகளை உம் மூலமாக மக்களுக்கு எய்து இருக்கின்றேன் அதற்கு உமக்கு நன்றிகள்.

மஹாபாரதத்தை உணராத மக்கள் கௌரவர்களை இழிவாகக் கருதும் நிலை மாறவேண்டும். மஹாபாரத உண்மைகளை முழுக்க அறிந்திருந்தால் கௌரவர்கள்தான் தர்மத்தின் விளைநிலம், சத்தியத்தின் கோயில், வாய்மையின் உதிப்பு போன்ற யதார்த்தங்களை அறிவார்கள். அறியவேண்டும்.

கருணையுடன்
சியாத்

அன்பரே, சமர் என்பது ஆயுதமேந்தி செய்வது மட்டுமல்ல, புத்தியைக் கொண்டு புரிவதும் போரிற்கு வரைவிலக்கணம் என்பதை அறிவதற்கு உன் புத்திக்கு சக்தி இல்லை.

கன்னன் தர்மத்தின் பக்கம் நின்றான் என்பதை நீங்கள் கூறும்போது உம் நாவின் விளிம்புகளில் இருந்து புறப்படுகின்ற வார்த்தைகளுக்கு நீங்களே மது புகட்டி அனுப்புகின்றீர்களே, அதனால்தான் உம் சொற்களின் பக்கத்தில்கூட உண்மை உலாவ மறுக்கிறது.....

கன்னன் தருமத்தின் பக்கம் நிற்கவில்லை..... மாறாக தருமனின் பக்கம்தான் நின்றான் என்பதை உலகமே அறிந்த உண்மை.

மஹாபாரத்தின் இறுதிச் சமரிலே கன்னன் முதலானவர்களின் மத்தியில் பீமனும்,துரியோதனனும் கடும்போர் புரிகின்ற நேரத்திலே பாண்டவர் முதலானவர்கள் கூறிய கருத்து என்ன? ” சண்டை யுத்த தருமத்தின்படி இருக்கவேண்டும்” என்று. இது பாண்டவர்களின் வாய்வார்த்தைகளில் மட்டும்தான் உலாவியதே தவிற செயலில் அதை காட்ட மறந்து விட்டதை யாமெல்லோரும் அறிவோம்.

அவ்வாறு கூறியும் துரியோதனன் ஒரு துளியேனும் யுத்த தருமத்தை மீறவில்லை. மாறாக பீமன் முழுக்க முழுக்க யுத்த தருமத்தை மீறினானே. அதை கன்னன், பாண்டவர்கள் முதலானவர்கள் பார்த்து இரசித்தார்களே தவிற மறுத்துக் கூறவில்லையே..... அப்போது கன்னன் முதலானவர்களின் நாவுகளுக்கு கடிவாளமிட்டது யார்? அப்போது உண்மை, தர்மம், நேர்மை இறந்துவிட்டதா? சிறந்த வீரமகன் துரியோதனனை கன்னனின் வழிகாட்டலில் கொடூரமாக கொன்றார்களே இது கொடுமையாக தெரியவில்லையா உமக்கு....

உண்மையில் கௌரவர்களை எந்த மானிடனாலும் தோற்கடிக்கவோ, கொலை செய்யவோ முடியாது என்பதுதான் உண்மை. எல்லோரையும் மற்றும் தர்மத்தையும் சேர்த்து கொலைசெய்தது கன்னன் மட்டுமே.

கர்ணன் இணையில்லா வீரன். அவனை அழிப்பதற்கு கன்னனாலும் முடியாது. அதனால்தான் இத்தனை கடவுள்களும் சேர்ந்து சதி செய்துவிட்டனர்.

மமதை தலைவிரித்தாடும் உம் எண்ணங்கள் சொட்டுகின்ற சிந்தைக்கு உண்மைகள் கசப்பாகத்தான் இருக்கும் நண்பரே...

தருமனுக்கு கன்னனின் தங்கை மனைவியாக இருந்தாள், பீமனுக்கும் ஓர் அரக்கி மனைவியாக இருந்து அவளுக்கு ஒரு பிள்ளையும் இருக்கிறது. அப்படி இருக்கின்றபோதும் ஐவருக்கும் பொதுவாக ஒரோ ஒரு மனைவி இருக்கின்றாள் என்றால் அவளை எவ்வாறு சொல்லுவது நண்பரே?
(உம்முடன் 5 சகோதரர்கள் என்றால், உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனைவி இருக்கின்றபோதும். உங்களின் ஐவருக்கும் ஒருத்தி மனையாக இருந்தால் அவளை எவ்வாறு கூறுவீர்கள்?? பத்தினி என்றா?? அவ்வாறு கூறுவதற்கு உமது நாவுக்கு சக்தி வருமா?) அந்த உண்மையைத்தான் துரியோதனனும் கூறினான் இதுதானே உலக வழமை. உண்மை உரைத்ததுக்கு பாண்டவர்களுக்கு கோபம் வந்ததாம்? இவர்கள் தருமத்தின் வழியாம்?? வேடிக்கையாக இருக்கிறது......

தாய், தன் கணவனைத்தவிற மற்றவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றிருக்கிறாள். பிள்ளைகள் ஐபேரும் பொதுவாக ஒரு மனைவியோடும், தனித்தனியாக தம் மனைவியரோடும் வாழ்கிறார்கள்....
இவ்வாறானவர்களுக்க அரசாட்சியைக் கொடுத்தால் சமுதாயம் உறுப்படுமா? சீரழியாதா? கலாச்சார விழுமியங்கள் வெட்கித் தலைகுணியாதா??? இது அச் சமூகத்திற்கு இழுக்கை ஏற்படுத்தாதா??

சமூகத்தைப் பற்றி உமக்கு அக்கறை இல்லை நண்பரே. உம்மைப்போல் எம் துரியோதனனும் சுயநலவாதியல்ல..... அவன் சிறந்த ஒழுக்கவிழுமியங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்தவன். அவனது தாயும்-தந்தையும் ஒழுக்கமானமுறையில் அவனை ஈன்றெழுத்தார்கள்.

துரியோதனன் மக்களுக்குக் கொடுத்துக் கொடுத்து சிவந்த கைகளை உடையவன். அதனைத் தாங்கமுடியாமல் பாண்டவர்கள் அரசசபையில் போய் எவ்வாறு முறையிட்டார்கள் என்பதை நீ அறிவாயா நண்பரே..?
”துரியோதன் கொடுத்தே அரச கஜானாவை காலிசெய்யப்போகிறார் அதை தடுக்க வேண்டாமா?” இவ்வாறு கூறிய அற்பத் தனமுள்ள பாண்டவர்களுக்கு ஆட்சியைக் கொடுத்தால் மக்கள் பசியும்-பட்டிணியுமாகாத்தான் இறக்கநேரிடும். இதையும் அறிந்திருந்ததால்தான் ஐந்து ஊரும் கொடுக்க முடியாது என்று கூறினான் காரணம் அந்த ஐந்து ஊரிலுள்ள மக்களையும் அவன் அநாதையாக்க ஏழ்மை நிலைக்கு இட்டுச் செல்ல எம் துரியோதனன் விரும்பவில்லை தோழரே......

குந்தி, தம்பக்கம் கர்ணணை அழைத்தது எதற்காக என்ற உண்மை உமக்குத் தெரியாமலா இத்தனை காலமும் ஜடமாக உலாவித்திரிகிறாய் நண்பனே....

கர்ணணிடம் இருக்கின்ற ஆயுதம்-அவனின் பலம் இத்தனையும் குந்தியின் மைந்தர் உட்பட்ட சேனையினை அழித்துவிடுமோ என்ற அச்சத்தை கன்னன் குந்திக்கு உபதேசித்தான் அதை தடுக்கவே குந்தி விரைந்தாள் தனது நடிப்பினைக் காட்டி அழைத்தாள் மறுக்கவே அந்நேரம் வரம்கேட்கிறாள், கொடுத்துக் கொடுத்து கொடையில் மழையைப் போன்ற கைகளையுடைய கர்ணண் அவ்வரத்தை அளிக்கிறான். சந்தோசத்தோடு வீடு திரும்புகிறாள் அந்த தாய் எனும் போர்வையில் உள்ள தாடை குந்தி.

இத்தனை கேவலமான புத்தினைக் கொண்ட குந்தியும், அவளது மைந்தர்களையும் இன்னும் சிறந்தவர்கள் என்று கூறிக்கொள்கிறீர்களே..... நீங்கள்தான் உண்மையினையும், சத்தியத்தினையும், தர்மத்தினையும் குழிதோண்டிப் புதைப்பவர்கள் என்றுசொன்னால் அது மிகையாகாது.

நண்பரே.....
சத்தியம் மறிப்பதுமில்லை. அசத்தியம் உயிர்ப்பதுமில்லை. சத்தியம் காலம் கடந்தாயினும் கதிரவன்போல் பிரகாசிக்கத்தான் செய்யும் என்பதை புறிந்துகொள்ளுங்கள்.

கன்னன், குந்தி உட்பட்ட பாண்டவர்களும் அவர்களின் சேனைகளும் அகௌரவத்தின் பிறப்பிடம், அசத்தியத்தின் மத்தி, அதர்மத்தின் உறைவிடம், அநீதியின் நித்திலம் என்பதை மறந்து விடக்கூடாது.

கருணையுடன்
சியாத்

அன்பின் நன்பரே..... நீங்கள் மஹாபாரத்தை அரைகுறையாக அறிந்துவிட்டு விளக்கமில்லாமல் விளம்புகின்றீர்....வேதனையாக இருந்தாலும் ஒரு சில விடயங்களை உங்களுக்கு செப்புவதில் இன்பமடைகின்றேன்....

அனபரே. அந்தக் காலத்தில் சூதாட்டம் என்பது அரச பரம்பரையினருக்குரிய விளையாட்டாக இருந்தது. சூதாட்டத்தில் தோற்றுப் போனால் அதனால் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் வென்றவரையே சாரும். ஆகவே யோசனை செய்து பார்த்தால் உண்மை உதியமாகும்.

உங்களைப் பார்த்து ஒரு பெண் உனது தந்தையையும் இகழ்ந்துபேசி, உன்னையும் அவமானப்படுத்தினால் எந்த மானமுள்ள, வீரமுள்ள மனிதனுக்கும் கொஞ்சமாவது கோபம் வரத்தான் செய்யும். அதுதான் துரியோதனனுக்கும் நிகழ்தது என்பதை அறியமாட்டாயா தோழா....

”குருடனின் மகன் குருடன்தான்” என்று இகழ்ந்த பின்னும் மானம் வெட்கம் உள்ள எந்த ஆண்மகனுக்கும் கோபம் வரத்தான் செய்யும்? அவ்வாறு எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருப்பவனுக்கு வேறு பெயர் இருக்கின்றது. ஆனால் துரியோதனன் ஒரு வீரன் அதனால் அவனுக்கு கோபம் வந்தது. நண்பரே உங்களுக்கு வராதென்று எனக்குத் தெரிகிறது.

பாண்டுவும், திருதராஷ்டிரரும் முனிவருக்குப் பிறந்தாலும். இங்கு பிரச்சினை பாண்டுவுக்கு அரசாட்சியா? திருதராஷ்டிரருக்கு அரசாட்சியா என்பதில்லை என்பதை புறிய உங்களின் புத்திக்கு கடிவாளமிட்டது உங்களின் பெருமிதம்.

திருதராட்டினரால் பெற்றெடுக்கப்பட்ட சொந்த பிள்ளை துரியோதனன். ஆனால் பாண்டுவினால் பெற்றெடுக்கப்பட்ட சொந்தப் பிள்ளைகளா பாண்டவர்கள்? உங்களால் கூறமுடியுமா? பாண்டவர்கள் பாண்டுவின் புதல்வர்களல்ல.... மாறாக குந்தியின் மைந்தர்கள். குந்தியின் மைந்தர்களுக்கு எவ்வாறு அரசாட்சியைக் கொடுக்க முடியும்? அது அரச நீதியாகுமா?

ஆகவே சகோதரரே, உண்மையை அறியவேண்டும், இங்கே அரசாட்சி திருதராட்டினனின் மகனுக்கு அல்லது பாண்டுவின் மகனுக்கு எனவே, உண்மையில் பாண்டுவிற்கு புத்திர பாக்கியமில்லை. எனவே, பாண்டுவிற்கு பிள்ளைகள் இல்லை. ஆகவே, திருதராட்டினரின் மகனுக்கே அரசாட்சி.
இதுதான் அக்கால அரசநியதி.

இப்போது பெருமிதத்தால் கடிவாளமிடப்பட்ட உங்களின் சிந்தையில் சின்னச் சின்ன உண்மையின் சிதறல்களாவது சிந்தவில்லையா தோழா?

அதன்பிறகு, அரச தர்மத்தின்படி அரசாட்சியே பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாதபோது கன்னன் தூதுபோதுவது நியாயமா? சொல் நண்பரே?

அவ்வாறு குந்தியின் மைந்தர்களில் மூத்தவருக்குத்தான் அரசாட்சி கொடுக்கவேண்டுமென்றால் உண்மை தெரிந்த கன்னன், குந்தியிடம் என்ன சொல்லியிருக்வேண்டும்? அதன் பிறகு குந்தி கர்ணணை அரசனாக்கு என்று துரியோதனனிடம் கூறி இருந்தால், உயிரைக்கொடுக்கவும் தயங்காத துரியோதனன் மறுத்திருப்பானா?

(நண்பரே உமக்கு ஒன்று தெரியுமா? அரக்கு மாளிகை விடயம் இன்றும் ஒரு சர்ச்சைக்குரியது என்பது?)

இது தர்மத்தை அழித்து அதர்மத்தை நிலைநாட்டிய கன்னனையும், உண்மை தெரிந்தும் பெற்ற மகனை பலி கொடுத்த குந்தியையும் இந்த உலகம் என்றும் இகழ்ந்து கொண்டே இருக்கும்.

உங்களின் சிரிப்பொலி, உங்களின் நாவில் இருந்து சிந்தியதுக்கா வேதனையால் அழுகின்ற வார்த்தைகளின் மரண ஓலம் என்பதை மறந்து விடாதீர்கள்.

கருணையுடன்
-சியாத்-

சிந்தனை செய்து பாருங்கள்.......
அரசாட்சி உண்மையில் யாருக்கு வரவேண்டும்? பாண்டவர்களின் பிறப்பு பற்றி உண்மையில் அறிந்திருந்தால், அவர்கள் எவ்வாறு பிறந்தார்கள் என்பது பற்றிப் புறிந்திருந்தால், இவ்வாறு அவர்கள் அரசாட்சிக்காக சண்டை செய்தது நியாயமில்லை என்பதை அறிந்திருப்பீர்கள். உண்மையில் பாண்டவர்கள் குந்திதேவிக்கும் அவரைத் திருமணம் செய்த கணவருக்கும் பிறந்தவர்களா? அத்தோடு அவர்கள் அஞ்ஞாதவாசத்தை செவ்வனே நிறைவேற்றினார்களா? யோசித்துப் பாருங்கள்.

அவ்வாறு கடவுளர்களுக்குப் பிறந்த மக்கள் அவர்கள் கர்ணன் உட்பட. அப்படினால் உண்மையில் அரசாட்சி கர்ணனுக்குத்தான் வரவேண்டும். அவ்வாறும் செய்யவில்லை. பதவி வெறி தலைக்கேறிய குந்தியும் அவர்களது புதல்வர்களும் நியாயமற்ற அரசாட்சிக்காக சண்டை செய்து தர்மத்தை அழித்து அதர்மத்தை நிலை நாட்டினார்களே...... இது கொடுமையிலும் கொடுமை.

துரியோதனம் எவ்வாறு கொல்லப்பட்டான்? கன்னனை நம்பி தர்மம் நிலைக்கும் என எண்ணி சண்டை செய்த துரியோதனனுக்கு தர்மங்களை மீறி கொலையும் செய்து விட்டனர்.

பாண்டவர்கள் இவ்வுலகத்தில் தர்மத்தை நிலை நாட்டவில்லை. பொய், ஏமாற்று போன்ற பல்வேறு மோசமான விடயங்களைக் கைகொண்டு இந்த உலகத்தில் அதர்மத்தை நிலைநாட்டி இருக்கின்றார்கள் என்பதே உண்மை.

பாவமறியாத கௌரவர்கள் கொல்லப்பட்டமை கன்னனின் சூழ்ச்சியே.....

கருணையுடன்
-சியாத்-
+94757711334

சந்தோசத்தில் சானி அடிப்பதற்கு......


சியாத் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே