Saarumathi- கருத்துகள்

வீடு விட்டு வந்து சேர்ந்த வேறு வீடு
அடித்தள அறிவை அளித்த ஆலயம்
வாழ்வில் வண்ணங்களை வாரி தெளித்த வகுப்பறைகள்....
சுமை இருந்தாலும் சுகம் தரும் நண்பனோடு பேசி செல்லும் மிதிவண்டி பயணங்கள்....
அன்பு அரண் அறிவு சீராய் சேர்த்த ஆசிரியர்கள்..
இவற்றை மிஞ்சிடும்
மேசை கிறுக்கல்கள் திடீர் சறுக்கல்கள்,
இவற்றில் புலப்படும் நடுங்காத நட்பு....

இவையாவும் சங்கமித்த கடலே பள்ளி
இமை பட்டு தெறிக்கும் துளி நீராய்
மேன்மாயான நினைவுகளை நெஞ்சில் நிலைக்க செய்ததே
பள்ளி படிப்பு..


Saarumathi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே