mannan- கருத்துகள்
mannan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [87]
- கவின் சாரலன் [40]
- தாமோதரன்ஸ்ரீ [18]
- C. SHANTHI [16]
- மலர்91 [14]
mannan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
முத்தமிழை தருபவளே.................
இரவான வேளையிலே
இரை ஊட்ட வந்தவளே!
இமைக்காமல் உன் அங்கம்
புரட்ட நினைப்பேனடி
நரை என்னில் விழுந்தாலும்
நடு நடுக்கம் கொண்டாலும்
உன்னோடு உறவாட
கண்கள் மட்டும் போதுமடி
எனைத்தீண்டு எனைத்தீண்டு
என்றென்னை தூண்டுவதால்
உனைத்தீண்டி அறிவமுதம்
பெறநெஞ்சம் துடிக்குதடி
காசெல்லாம் உன்னை வாங்க
வீணாகுதேன்போர்க்கு - நீ
அறிவு சுகம் தருவது ஏன்
தெரியாமல் போகுதடி?
பல பேரின் விடியலுக்கு
விளக்கான உன்னோடு -நான்
விளக்கேற்றி விடியும் வரை
விளையாடல் என்ன தப்பு ?
உன்னை என்ன செய்தாலும்
அலுக்காமல் இருக்கின்றாய்
எப்போதும் எனைதீண்டி
அறி என்று சொல்கின்றாய்
இருட்டு உனக்கென்றும்
பிடிக்காத வேளையடி
வெளிச்சத்தில் உனைத்தொட்டால்
எனக்கறிவு பெருகுதடி
கண்களால் என்னை
களவாடு என்கிறாயே
கனம்முளுக்க என்னையே
மனனம்செய் என்கிறாயே?
உன்னோடு எனக்கு காதல்
என்னோடு உனக்கு இல்லை
*********************************************
"அறிவுதந்த புத்தகமே
உன்னை அப்போதும் கற்பேனே"
...கிருஷ்ணா