thanuraj- கருத்துகள்

வணக்கம் எப்படி இதில் என் படிப்பை சேர்த்து kolluvathu

Amma



தமிழுக்கு இலக்கணம்
எனக்கு என்றுமே துனைக்களம்
நீ அம்மா.

வயிற்றில் சுமந்து நான் பிறக்கும் வரை நெஞ்சில் சுமந்து நான் வளரும் வரை உள்ளத்தால் சுமந்தாய் நீ அம்மா,

வெற்றிலையில் மை போட்டு பார்க்கும் மூடர்கல் போல என்னை நீ பார்க்க ஏங்கி உன் வயிற்றில் கை போட்டு பார்த்தவள் நீ அம்மா,

உனக்குள் எத்தனை போர்சுமைகள்
வந்தாலும் என்னை பட்டினி போடாது உன் விழிகளில் தயக்கம் காட்டாது தாங்கி சென்றவள் நீ
அம்மா,

வெட்டி எறியப்பட்ட தலை முடியாய் தூக்கி எறியாது அதுவும் தொப்புள் கொடி உறவென உலகிற்கே காட்டியவள் நீ அம்மா,

சூரியனும் சந்திரனும் தோன்றினால் தான் இரவு பகல் என் வாழ் நாட்க்களில் இரண்டாகவும் தோன்றியவள் நீ அம்மா,

கரை தேடும் அலை போல தினம் தேடுவது நீ அம்மா,

கருவறையில் சுமந்து கால நிலையால் பிரிந்து உன் ஈர்ப்பு விசை அன்பால் இணைந்து பிரிவு என்னும் கொடுமையான நோயால் பாதிக்கப்படாது வேண்டி நிற்கும்
இன்றும் என்றும்
உன்
தனுக்குட்டி


thanuraj கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே