தெனாலிராமன் Tenaliraman
Tenaliraman Tamil Cinema Vimarsanam
(Tenaliraman Vimarsanam)
நீண்ட நாட்களுக்குப்பின் மன்னர்கள், ஆட்சிகால படத்தை காண முடிகிறது. நிறைய படங்கள் மன்னர்கள் பற்றி வந்திருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு சிறப்பிருக்கிறது. அதில் இப்படமும் ஒரு சிறப்பு நகைச்சுவை படம்.
இரண்டு வேடங்களில் அருமையாக நடித்து சிரிக்க வைத்திருக்கிறார் வடிவேலு. நீண்ட வருடங்களுக்கு பின் பழைய வடிவேலுவை பழைய மாதிரியே காணமுடிகிறது.
படத்தில் அழகு பதுமையாக மீனாக்ஷி டிக்ஷிட். நல்ல அழகும்,சிறப்பான நடிப்பும் இருக்கிறது.ஆகையால் பல படங்களிலும் இனி இவரை காண முடியும்.
சீன அரசிடம், ஒன்பது மந்திரிகள் நாட்டை வியாபாரத்துக்கு விட ஒப்புக்கொள்கிறார்கள்.மன்னர் ஒரு மக்காக இருக்கிறார் . அப்பாவியான மன்னர் நாடு நலமாக இருப்பதாக மந்திரிகள் சொல்வதை நம்பிக்கொண்டு அந்தப்புரத்தில் 36 மனைவிகளுடன் ஜாலியாக இருக்கிறார். சீனப்பயணத்தில் ஒரு நல்ல மந்திரி சீன வில்லனால் கொல்லப்பட, அந்த பதவிக்கு யாரைப் போடுவது என போட்டி நடக்கிறது.
தெனாலிராமன் ஜெயித்து மந்திரியாக உள்ளே நூளைந்து
என்னென்ன சாகசம் புரிகிறார்?என்பதையும், இளவரசியை கரம் பிடித்தாரா? என்பதையும் இப்படத்தில் நகைச்சுவையுடன், கலகலப்பாக காணலாம்.
மந்திரிகளாக நடித்த பிரபலங்கள் சிறப்பாக நடித்துள்ளனர்.
டி . இமான் இசையில் பாடல்கள் அருமை. பாடகர்களின் குரலில் பாடல்களை தாராளமாக ரசிக்கலாம்.
தெனாலிராமன் - இளவரசிக்கு மட்டுமல்ல, நமக்கும் பிடித்த ராமன்.
படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பதிவு செய்யவும்.