அரண்மனை

Aranmanai Tamil Cinema Vimarsanam


அரண்மனை விமர்சனம்
(Aranmanai Vimarsanam)

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், அரண்மனை.

இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் சுந்தர் சி,வினய் ராய்,சந்தனம்,மனோ பாலா, அண்ட்ரியா ஜெர்மியாஹ்,கோவை சரளா,ஹன்சிகா மோட்வாணி,லக்ஷ்மி ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.

வினய் ராய், அண்ட்ரியா ஜெர்மியாஹ்,சித்ரா லட்சுமணன், கோவை சரளா, மனோ பாலா,லக்ஷ்மி ராய் ஒரு பெரிய அரண்மனையின் உரிமையாளராக வருகின்றனர். அரண்மனையை விற்க கூட்டுக்குடும்பமாக அரண்மனை வீட்டில் ஒன்று கூடுகிறார்கள். சந்தனமும், அவரின் காமெடி நண்பர்களும் அரண்மனை வீட்டில் சமையல் வேலை ஆட்களாக நடித்து வருகின்றனர்.

அண்ட்ரியா ஜெர்மியாவின் அண்ணனாகவும், வக்கீலாகவும் சுந்தர் சி. வினயின் அன்பு மனைவியாக அண்ட்ரியா ஜெர்மியாஹ். திடீர் என்று அவ்வரண்மைனையில் உள்ள மூன்று வேலையாட்கள் இறக்கின்றனர். ஒரு நாள் குறி கூறும் நபர் எதையோ பார்த்து ஓடுவதைக் கண்ட சுந்தர் சி, அவனை பிடித்து என்ன என்று விசாரிக்க அவன் உங்கள் வீட்டில் ஒரு பெண்ணின் உடம்பில் பேய் உள்ளது எனக்கூற, அது யார் என்று சுந்தர் சி அறிந்து அதிர்ச்சியில் உறைகிறார். பின்னர் அப்பேய் யார் என்பதை அறிந்து அதை விரட்ட நினைக்கிறார் அதற்குள் சூரிய கிரகணம் ஆரம்பித்து அப்பேயின் சக்தி கூடக்கூட அக்குடும்பத்தில் உள்ளவர்கள் நிலை என்ன ஆகிறது என்பதையும், சுந்தர் சி என்ன செய்தார்? ஹன்சிகாவின் கதை என்ன? என்பதையும் இப்படத்தில் காணலாம்.

படத்தில் அனைவரின் நடிப்பும் சிறப்பு. அரண்மனை நகைச்சுவை மற்றும் திகிலின் மனை.

அரண்மனை - பார்க்கலாம் பலமுறை.

இப்படத்தைப் பார்த்த எழுத்துத் தோழர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-09-19 15:34:26
4.5 (18/4)
Close (X)

அரண்மனை (Aranmanai) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே