படம் பார்த்து கவிதை சொல்லுங்கள்
... படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் ...
1 . நண்பர்களே கவிதைக்கான படம் மேலே பதிவு செய்யப்பட்டுள்ள படமே.. இந்த ஒரு படம் மட்டுமே... இந்த ஒரு படத்தினை மையமாகக் கொண்டு சமூகம் , அவலங்கள் , இயற்கை , காதல் , நட்பு , பிரிவு , உறவுகள் , Fantasy என்று எந்தப் பிரிவிலும் கவிதைகள் படைக்கலாம்... ஒருவர் ஒரு கவிதை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்... போட்டிக் கவிதை பதிவு செய்கையில் மறக்காமல் இந்தப் படத்தினை , கவிதையில் இணைத்துப் பதிவு செய்தல் அவசியம்... இந்தப் படம் தவிர்த்து வேறு படம் பதிவு செய்யப்பட்ட கவிதைகள் போட்டிக்கென்று எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது நண்பர்களே...
2 . கவிதைக்கான தலைப்பு - தோழர்கள் தம் விருப்பத்தின் படி எந்த ஒரு தலைப்பும் எடுத்துக் கொள்ளலாம்.. கவிதைப் போட்டிக்குக் கவிதைப் பதிவு செய்கையில் ,
'படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - கவிதைத் தலைப்பு'
இந்த முறையில் தலைப்பினைப் பதிவு செய்தல் அவசியம்..
3 . கவிதைக்கான அளவு : குறைந்தபட்சம் எத்தனை வரிகள் வேண்டுமானாலும் இருக்கலாம்... அதிகப்பட்சம் 24 வரிகள் மட்டுமே இருத்தல் அவசியம்... ஒரு வரிக்கு அதிகப்பட்சம் நான்கு சொற்கள் மட்டுமே... எழுத்துப்பிழைகள் தவிர்க்கப்படுதல் அவசியம்...
4 . போட்டி நடைபெறும் நாட்கள் - 2015 மே மாதம் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி முடிய.. வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்கள் ... ஞாயிற்றுக் கிழமை இரவு 12.00 மணிக்குள் பதிவு செய்யப்படும் கவிதைகள் மட்டுமே போட்டிக்கென்று எடுத்துக் கொள்ளப்படும் நண்பர்களே..
5 . சமர்ப்பிக்கப்படும் கவிதைகள் படைப்பாளிகள் தம் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்... எழுத்துத் தளத்தின் இன்றைய உறுப்பினராக இல்லாதவர்கள் , உறுப்பினராகி பின்னர் படைப்பை சமர்ப்பிக்கலாம்...
6 . கவிதைகளைப் பதிவு செய்யும் போது , இறுதியில் 'மற்ற போட்டிக்கு சமர்ப்பிக்க' என்பதை மறக்காமல் சொடுக்குதல் அவசியம்...
7 . போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான முடிவுகள் அடுத்த செவ்வாய்க்கிழமை அன்று , அதாவது மே மாதம் 12 ஆம் தேதி அன்று மாலை அறிவிக்கப்படும் நண்பர்களே..
8 . நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது..
தோழர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...
நேசத்துடன்
கிருத்திகா தாஸ்
மொத்தம் மூன்று பரிசுகள்
முதல் பரிசு : 750 ரூபாய்
இரண்டாம் பரிசு : 500 ரூபாய்
மூன்றாம் பரிசு : 250 ரூபாய்
படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் போட்டி | Competition at Eluthu.com