எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

---- 15நிமிடங்கள் ---- எட்டு மணி நேர உறக்கம்...

---- 15நிமிடங்கள் ----

எட்டு மணி நேர உறக்கம் போக...
இருந்த பதினாறு மணி நேரத்தில்
ஒரு மணி நேரம்
உண்ணுதல் , உடல் சீர்
விஷயங்கள் போக ...

மிஞ்சிய
15 மணி நேரத்தில்...

பதினாலே முக்கால்
மணி நேரம்
பிறருக்காக வாழ !!

15தே நிமிடங்கள்
எனக்கானது !

அது
"என் கவிதை நேரம் "...

அதை மட்டுமாவது
எனக்காக
எழுதி விட்டுப் போகிறேனே.!!

நாள் : 3-Sep-14, 6:21 am

மேலே