காலையில் சஹானதாஸ் ஒரு அருமையான பாடல் பதித்திருந்தார் .கடவுள்...
காலையில் சஹானதாஸ் ஒரு அருமையான பாடல் பதித்திருந்தார் .கடவுள் தந்த அழகிய வீடு வீடு , மாயாவி திரைபடத்திலிருந்து . தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வந்த நல்ல பாடல் . இந்த பாடல் கேட்டும் ஒரு துளி கண்ணீர் வரவில்லை எண்றால் , அவர்களை 8 மணி நேரம் வெல்டிங் செய்ய வைக்க வேண்டும் , வெல்டிங் கண்ணாடி கொடுக்காமல் .
அந்த அழகிய பாடலில் இருந்து மீண்டு ஆபீஸ் போகலாம் என்று நினைக்கும் போது கீத்ஸ் வந்து ஜனனி ஜனனி பாடல் பதித்து விட்டார் . கடவுள் கருத்து அற்றவர் கூட இந்த பாட்டை போட்டு விட்டு கண்மூடி தியானமோ / தூங்கவோ செய்யலாம் அவ்வளவு ஒரு ரம்மியமான பாடல் .
இளையராஜா என்று ஒருவன் வரவில்லை எண்றால் நாமெல்லாம் இன்று இந்தி பாடல்களையோ / மேற்கத்திய இசையையோ முனுமுனுத்துக் கொண்டிருப்போம்
இளையராஜா என்று ஒருவன் வரவில்லை எண்றால் கர்நாடக இசை மேல்தட்டு மக்களிடம் மட்டுமே இருந்திருக்கும் .( இன்று நிலைமை மாறி இருக்கிறது . இன்னும் மாற வேண்டும் )
இளையராஜா என்று ஒருவன் வரவில்லை எண்றால் என்னை மாதிரி குப்பனும் / சுப்பனும் சங்கீதம் பேசி இருக்க மாட்டான் . பாடி இருக்க மாட்டான் .
இளையராஜா வரவில்லை எண்றால்
நம் கல்யாணங்கள் , பிறந்த நாள் , காதுகுத்து , காதல் , மஞ்சள் நீராட்டு , மாரியம்மன் திருவிழா
எல்லாம் சப்தங்கள் அற்ற ஒரு வெறுமையில் சடங்காகி போயிருக்கும் .
அவன் ஆஸ்கர் வாங்காமல் போகட்டும் கமல் சொன்ன மாதிரி அது ஒரு அமெரிக்க தரத்தில் இருக்கும் படைப்புகளுக்கு கொடுப்பது .நம் தரம் உயர்த்து .
நம் தரம் உயர்த்திய ராஜாவை நம் இதய அரண்மனையில் வைத்து ராஜா புகழ் பாடுவோம் .அவன் நம்மை பல அன்னியரகளிடம் இருந்து மீட்ட அரசன் .!
ஆனால் நம்மோடு வாழும் இசையின் முதல் குடிமகன் .!!
திருத்தி பதிக்கிறேன்
பின் குறிப்புகளை சேர்த்து .
ஆராதனா வையும் / பாபி யையும் / போனி எம் மையும் / பீட்டில் சயும் கேட்டு கொண்டிருந்த எழுபதுகளின் கடைசியில் நம் இசை கேட்க வைத்தான் .
ஆனால் அப்போதும் இவன் பறை மேளம் அடிக்கிறான் என்று சொல்லி கொண்டிருந்தார்கள் , நம் இசையே பறையும் , மேளமும் என்று தெரியாதவர்கள் .
பிறகு அவர்களும் வேறு வழி இல்லாமல் மூடுபனி வந்தபோதும் / சிந்து பைரவி வந்த போதும் போதும் அவனை ஒத்துக் கொண்டார்கள் .
நான் கல்லுரி படிக்கும் போது கவிதையா எழுதி ஒரு தலையா காதலிக்கும் மாணவர்களுக்கு அடிக்கடி சொல்வேன் - "டேய் கவிதை எழுதறதல்லாம் விட்டுட்டு எப்படியாவது ஒரு இளையராஜா பாட்ட நல்லா கத்துகிட்டு அவ கிட்ட போய் பாடிடு . வரும் போது 'ஐ லவ் யு ' சொல்லலைன்னா என்ன கேளு!! "