எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பனி கொட்டும் இரவு... பகல் தூங்கும் வேலை... நிலவு...

பனி கொட்டும் இரவு...
பகல் தூங்கும் வேலை...

நிலவு விழிக்கும் பொழுது,
உன் முகம் நினைவுக்கு வர...

சற்று தாகம் கொண்டது
என் இளமை....

விழித்திரை
விளக்காய் எரிய...

மனத்திரை முழுவதும்
உனக்காய் உருக...

நித்திரை கெட்டது..

காதல்
முன்னுரை கண்டது....

யார் நீ..???...

எதற்க்காக சிரித்தாய்...?

காரணம்
தேடியே இரவு நீண்டது.....

சிறு கல்தான் என்மேல்
நீ வீசி சென்றது....

கலங்கிய நீர் ஓடையாய்
உன்னை தேடிவரும்
என் காதல் அலைகள்....

பார்க்காமல்
சென்றிருக்கலாம்...

சிரிக்காமல்
சென்றிருக்கலாம்...

இரண்டையும்
ஒருசேர செய்துவிட்டாய்...

என் மனம்
உனைசேர துடிக்கிறதே....

எப்பொழுதும் எனக்காய்
விடியும் காலை...

அன்று முதல்
உனக்காய் விடிந்தது...

முதல் நாள்..

நீ சிந்திவிட்டு சென்ற
புன்னகையை..

சேமித்து வைத்து
காத்துருகிறேன்,
நீ வரும் வழியில்...

என்னில் காதல்
முன்னுரை எழுதியவள் நீ...,

தினமும்
எழுதிவிட்டு போ..

காதலெனும்
சிறு வரியை...

காவியமாகட்டும்
நம் காதல்....

நாள் : 11-Sep-14, 10:28 am

மேலே