இப்போதெல்லாம் வானொலியில் பாடலாசிரியர்கள் பெயரையோ இசையமைப்பாளர்கள் பெயரையோ வாசிப்பதில்லை....
இப்போதெல்லாம் வானொலியில் பாடலாசிரியர்கள் பெயரையோ இசையமைப்பாளர்கள் பெயரையோ வாசிப்பதில்லை. ஒரு பாடல் உருவாக நாங்கள் படும்பாடு கொஞ்சமல்ல. எனவே தயவு செய்து படைப்பாளிகளின் பெயரை மறைக்காதீர்கள். தற்போதைய சூழலில் வெளிவரும் படங்களில் பாடலுக்கு சரியான தளம் கிடைப்பதில்லை. 'ஷாஜகான்' படத்தில் 'மெல்லினமே மெல்லினமே' உட்பட அருமையான மெலோடி பாடல்களை எழுதியிருக்கிறேன். ஆனால் ஹிட் ஆனது என்னவோ 'சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்' என்ற குத்து பாடல்தான். இப்படியான கருவாட்டு வாசத்தில் மல்லிகை பூ மறுதலிக்கப்படுகிறது. இந்த நிலையை மாறவேண்டும்"
- கவிப்பேரரசு வைரமுத்து