அன்பான தோழமைகளே, எழுத்து சொந்தங்களே..! ஒரு வித மன...
அன்பான தோழமைகளே, எழுத்து சொந்தங்களே..!
ஒரு வித மன அழுத்தத்தின் காரணமாக என்னால் தொடர்ந்து தளத்தில் உலாவ இயலாது. மனதில் ஒரு சூறாவளி கோரத்தாண்டவம் ஆடுகிறது. அடக்கிவிடத்துடிக்கிறேன், அது என்னை அடக்கம் செய்ய துணிகிறது.
நான் எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடியவன். இம்முறை உணர்ச்சிவயப்படவில்லை, உணர்ச்சி இழந்து உயிர்வலியே வந்துவிட்டது. காரணங்கள் என்னை தவிர மற்றவர்களுக்கு வெறும் அற்பமாகவே தோன்றும். ஆக சொல்லவிருப்படவில்லை.
எனது இந்த மன அழுத்தத்திற்கு இந்த தளத்திலிருக்கும் யாரையும் நான் குற்றம் சுமத்தவிரும்பவில்லை. :)
எனது கதைகளையும் கவிதைகளையும் ( இவையெல்லாம் எனது கிறுக்கல்கள் என்றுதான் நான் சொல்லிக்கொள்வேன்) தொடர இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன்.
நிம்மதி தேடி எழுத்துக்கு வந்தேன். என் தலையெழுத்து அந்த நிம்மதி எதற்கு உனக்கு என்று கேள்வி கேட்டு துளைக்கிறது.
தனிமையை தேடி பயணிக்க புறப்படுகிறேன்.
இதுவரை என் எழுத்துக்கு ஆதரவு தந்த அனைத்து நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும் நன்றிகள் ..!
மனப்பாரத்திலிருந்து மீண்டால் மீண்டும் வருகிறேன்.
அன்பு என்ற கையொடிந்த நிலையில்..! தன்னம்பிக்கை இருக்கிறது.:)
-இரா-சந்தோஷ் குமார்.