எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முனைவர் க. இராஜா உதவிப்பேராசிரியர் முதுகலை மற்றும் தமிழாய்வுத்...

முனைவர் க. இராஜா
உதவிப்பேராசிரியர்
முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறை
ஸ்ரீ வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரி
காட்டேரிää ஊத்தங்கரை – 635 207.
மின் அஞ்சல் : rajavmctamil@gmail.com
திணைப் பெயர்கள்
‘சீரிளமைத் திறம்’ என மணோன்மணியம் சுந்தரானார் வியப்பதுää குறைந்தபட்சம் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது தொல்காப்பியமாகும் இதனைää ‘தொல்காப்பிய கடலிற் சொல்தீபச் சுற்றளக்கப்ää பல்கால் கொண்டோடும் படகென்ப’ என்று குணவீர பண்டிதர் வியக்கிறார். அப்படிப்பட்ட தொல்காப்பியம் என்னும் வித்து வளர்ந்து சிறந்து விரித்து கிளை பரப்பி நிழல் தந்து பலரும் பயன்கொள்கின்ற கனிமரமாகத் திகழ்கின்றது. அத்தொல்காப்பியத்தில் அகத்திணைகளின் பெயர்கள் எவ்வாறு வழங்கப்பட்டிருக்கின்றன என்பதனை விளக்குகின்றது இக்கட்டுரை.
மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீPம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (950)
என்பது தொல்காப்பிய நூற்பா. இது பொருளதிகார அகத்திணையியலில் ஐந்தாவது நூற்பா. இந்நூற்பாவின் பொருளும் கருத்தும் ஆயுந்தோறும் முன்னைக் கருத்து மாய்கின்றது. கருத்துக்கோவைக்காகவும் ஆய்வுத் தெளிவுக்காகவும் இதற்கு முன்னுள்ள நான்கு நூற்பாக்களையும் நோக்குதல் அவசியமாகிறது.
தொடர்பான நூற்பாக்கள்
1. கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப. (946)
2. அவற்றுள்
நடுவன் ஐந்திணை நடுவணதொழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே. (947)
3. முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங் காலை. (948)
4. முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே. (949)
அகத்திணைகள் ஏழு என்பது முதல் நூற்பாவின் கருத்து. ஏழனுள் கை;கிகளைää பெருந்திணை என இரு திணைப் பெயர்கள் மட்டும் இந்நூற்பாவில் இடம்பெற்றுளளன. ஒன்றின் முதல்ää முடிவு என்ற இரண்டினை மட்டும் விதந்து சுட்டிக் கூறுபது தொல்காப்பிய முறை என்பதுää
“அகர முதல் னகர இறுவாய்” (1)
என்ற நூற்பாவின் மூலம் அறிகின்றோம். ஏனை ஐந்து திணைப் பெயர்கள் யாவை என்பதற்கு விடையாக இரண்டாவது நூற்பா அமைகின்றது. ஐந்திணையில் நான்கே நிலம்பெறுவன எனவும் பாலைக்கு நிலமில்லை எனவும் விடை பெறுகிறோம். ஏழு திணைகளில் கை;கிளைää பெருந்திணைää நடுவணது என்று மூன்றுக்கும் நிலம் இல்லாதிருக்கும்போது நடுவனது ஒழிய வையம் பாத்திய பண்பு என ஒன்றை மட்டும் விளக்குவது பொருந்துமா? கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் வெளிப்படையான நூற்பா வேண்டுமா? வேண்டாமா? என்பது மேலாய்வுக்குரியவை.
ஏனையவை பொருளா?
அகத்திணைப் பாடல்களில் பயிலப்படும் கருத்துக்களை மூவகைப் படுத்தலாம் என்பது மூன்றாவது நூற்பாவின் கருத்து. இக்கருத்து எழுதிணைக்கும் பொதுவானதா என்பதும் ஐந்திணைக்கு மட்டுமா என்பதும் ஆய்வுக்குரியது. ‘முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்று’ என்னும் தொடருக்கு முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் எனப் பொருள் தருவர் உரையாசிரியர்கள். அதாவது உரிப்பொருள் என்பதில் வரும் பொருள் என்ற சொல்லை ஏனையிரண்டோடும் கூட்டியுரைப்பர். இது ஆசிரியர் கருத்தாகப் படவில்லை.
முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே. (949)
முதலெனப் படுவது ஆயிரு வகைத்தே. (962)
அவ்வகைப் பிறவும் கருவென மொழிப. (963)
உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே. (958)
தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே (959)
மேற்குறிப்பிட்ட நூற்பாக்களில் முதல் கரு இரண்டினையும் முதற்பொருள் கருப்பொருள் என ஆட்சி செய்யாமையும்ää மூன்றாவதை உரிப்பொருள் என ஆட்சி செய்வதையும் காணும்போது ஓருண்மை புலப்படுகின்றது. உரிப்பொருள் என்பது இன்றியமையாத பாடற்பொருள். ஓர் அகப்பொருள் முதலின்றியும் கருவின்றியும் வரமுடியும். அங்ஙனம் வருவதையும் காண்கிறோம். ஆனால் உரிப்பொருள் அற்றது அகப்பாட்டு ஆகாது. இதனைää
“முதலும் கருவும் ஓவியத்திற்கு நிறம்போலவும் தலைவிக்குத் தோழி போலவும் உரிப்பொருளுக்குத் துணையாகி வருவன. அவை உரிபொருளுக்கு ஒத்த நிகர் பொருளாகா. நிறமின்றியும் ஓவியவரைவுண்டு. தோழியின்றியும் தலைவியுண்டு” (வ.சுப.மாணிக்கம்ää தொல்காப்பியக் கடல்ää பக்.கஎரு-கஎசா)
என்று கூறுகிறார். ஆகவே உரையாசிரியர்கள் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்று ஒரு நிகராக உரை செய்ததும்ää
முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் எனமுறை
நுதற்பொருள் மூன்றினும் நுவலப்படுமே.
என அகப்பொருள் விளக்க ஆசிரியர் நம்பியார் நூற்பித்ததும் பொருந்தாது என அறிய வேண்டும்.
சொல்லிய முறை
இக்கட்டுரையில் ஆய்வுக்குரிய ஐந்தாவது நூற்பா முதலின் இருவகை நிலவகையைக் கூறுவது. கால வகையைச் சொல்லுவதற்குப் பல நூற்பாக்கள் பின்னே வருகின்றன. நிலவகையை இந்நூற்பா ஒன்றே கூறுகிறது. இந்நூற்பா நிலவகையை இந்நூற்பா நிலவகையை மாத்திரம் கூறியமைகின்றாதா? இல்லை. காடுறையுலகம்ää மைவரையுலகம்ää தீம்புனல் உலகம்ää பெருமணல் உலகம் என நான்கு நிலவகையைச் சொல்லுவதோடுää அவை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப் பெயர் பெறுவன என்று சொல்லுவதோடுää கருவில ஒன்றான தெய்வத்தையும் நிலத்தோடு இணைத்துச் சொல்லக் காண்கின்றோம். முதலுக்கு முன் இந்நூற்பாவில் தெய்வக்கரு இடம்பெறுகின்து என்பது சமயச் சிந்தனைக்கு உரியது. மாயோனை முன்வைக்கக் காரணம் என்ன? வேந்தன் வருணன் என்ற சொற்கள் குறிக்கும் தெய்வங்கள் யாவை? இத்தெய்வப் பட்டியலில் சிவன் இடம்பெறாதது ஏன்? இவை சமய வரலாற்றுச் சிந்தனைக்கு உரியவை. ஆயினும் இக்கட்டுரைக்கண் ஆராய்ச்சிக்குரியவைää
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.
என்ற இறுதி இரண்டடிகள். இவற்றுக்கு மூன்று கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன.
1. காடுறையுலகம் முல்லை எனவும் மைவரையுலகம் குறிஞ்சி எனவும் தீம்புனல் உலகம் மருதம் எனவும் பெருமணல் உலகம் நெய்தல் எனவும் நிரல் நிறையால் பெயர்பெறும்.
2. ‘சொல்லவும் படுமே’ என்ற எதிர்மறையும்மையால் முல்லை முதலிய பெயர்களாலே இந்நிலங்கள் குறிக்கப்பட வேண்டும் என்பது இல்லை. காடு மலை நாடு கடல் என்றும் கூறலாம். இதுவே பெருவழக்கு.
3. ‘சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’ என்றதனால் முல்லை குறிஞ்சி நெய்தல் என்று தொல்காப்பியர் சொன்ன வரிசையிற் கூறவேண்டும் என்பதில்லை. எப்படி வேண்டுமானாலும் கூறலாம். இம்முறை மாற்றத்தைச் ‘சான்றோர் செய்யுட் கோவையினும் பிற நூலகத்தும்; கண்டுகொள்க’ என்பார் இளம்பூரணர். ‘தொகைகளினும் கீழ்க்கணக்கு நூல்களினும் இம்முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க’ என்பார் நச்சினார்க்கினியர்.
சொல்லிய முறை வரிசை
மேலே கண்ட இம்மூன்று கருத்துக்களையும் இருவகையில் அடக்கிக் கொள்ளலாம்.
1. திணைகள் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்ற குறியீடுகள் பெறுதல்.
2. திணைகள் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்ற வரிசை பெறுதல்.
‘சொல்லிய முறை’ என்ற தொடருக்குக் குறியீடு பெறுமுறை எனவும்ää வரிசை பெறுமுறை எனவும் இரு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. திணைகளை எந்த வரிசை முறையில் சொல்வது என்ற கோட்பாட்டை முதலில் எடுத்துக்கொள்வோம். முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்பர் உரையாசிரியர்கள். இம்முறையைத் தொல்காப்பியரே பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர். (951)
வைகறை விடியல் மரும் எற்பாடு
நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும். (953)

நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே. (954)
திணைகளுக்குப் பெரும் பொழுது கூறும்பொழுதுää முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்ற வைப்புமுறையை மாறாது பின்பற்றியிருக்கக் காண்கின்றோம். நடுவு நிலைத்திணை என்று பெயர் பெற்ற பாலையின் பொழுது கூறும்பொழுது இறுதித் திணையாக அமைந்திருக்கின்றது.
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங்காலை திணைக்குரிப் பொருளே. (959)
உரிப்பொருள் கூறும் இந்நூற்பாவில் குறிஞ்சி பாலை முல்லை நெய்தல் மருதம் என்ற வரிசைக் முறைமையைக் காணமுடிகின்றது. நடுவணது எனப்பட்ட பாலை இரண்டாவது இடத்தைப் பெறுகின்றது. முதற்பொருளில் கண்ட வரிசை முறை உரிப்பொருளில் இல்லை.
நச்சினார்க்கினியர் விளக்கம்
இவ்விரு வரிசையும் ஒன்றாமல் இருப்பதை உணர்ந்த நச்சினார்க்கினியர். ஒவ்வொரு வரிசைக்கும் ஒவ்வொரு காரணம் கூறுகிறார். கற்பொடு பொருந்தி கணவனது சொல்லை ஏற்று வீட்டில் இருந்து நல்லறம் செய்வது மகளிர் இயல்பு ஆதலின் இருத்தலாகிய முல்லையை முதலிற் கூறினார் எனவும் புணர்தல் இல்லாமல் இல்லறம் நிகழமுடியாது ஆதலின் புணர்தலாகிய குறிஞ்சியை அதன்பின் வைத்தனர் எனவும் புணர்ச்சிக்குப் பின்பே ஊடல் நிகழும் ஆதலின் ஊடலாகிய மருதத்தை அதன்பின் வைத்தனர் எனவும் பிரிவு என்ற பொதுக்காரணம் பற்றி இரங்கற் பொருளாகிய நெய்தலை அதன்பின் இறுதியில் வைத்தார் எனவும் ‘மாயோன் மேய’ என்னும் நூற்பாவில் வரும்ää ‘முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்’ என்னும் வைப்பு முறைக்குக் காரணம் காட்டுவார் நச்சினார்க்கினியர்.
நச்சினார்க்கினியர் விளக்கத்தின் படி புணர்ச்சிக்குப் பின்பு ஊடல் நிகழும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதபடி உள்ளது. பிரிவு என்ற ஒன்று இல்லாதபோது பிரிவுää இருத்தல்ää இரங்கல் ஆகியன தோன்ற வாய்ப்பிலலை.
வேறு வரிசை முறைகள்
‘மாயோன் மேய’ என்னும் நூற்பாபில் சொல்லும் முதல் வரிசை வேறுää ‘புணர்தலும் பிரிதலும்’ என்னும் நூற்பாவில் சொல்லும் இரண்டாவது வரிசை வேறுää புறத்திணையியலிற் சொல்லப்பட்ட மூன்றாவது வரிசை இரண்டிலும் வேறு.
வெட்சி தானே குறிஞ்சியது புறனே (1001)
வஞ்சி தானே முல்லையது புறனே. (1006)
உழிஞை தானே மருதத்துப் புறனே (1008)
தும்பை தானே நெய்தலது புறனே (1014)
வாகை தானே பாலையது புறனே (1018)
புறத்திணையில் வரும் ஆநிரைப்போர்ää நிலப்போர்ää மதிற்போர்ää மைந்துப்போர்ää வெற்றி முடிவு என்ற வரிசைக்கேற்ப அகத்திணை முறைகள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு புறத்திணை சிறப்பிடம் பெறுகின்றது. அதற்கேற்ப அகத்திணை வரிசை முறை பெறுகின்றது. இவ்விடத்தில் இன்னொன்றினையும் சிந்திக்கவேண்டியுள்ளது. ஐந்திணைக்கும் ஒரு வரிசை முறை உண்டு என்றால் எழுதிணைக்கு ஒரு வரிசை முறை உண்டா என்ற ஐயம் தோன்றுகின்றது. கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் என்ற நூற்பாவை வைத்து கைக்கிளைää பெருந்திணைகளின் வரிசை முறையில் கைக்கிளையை முதலிலும் பெருந்திணையை கடைசியிலும் கூறியிருக்கவேண்டும். அப்படி இல்லாமல் இவ்விரு திணைகளும் புறத்திணையில் இறுதியாக இடம்பெறுகின்றது.
காஞ்சி தானே பெருந்திணைப் புறனே. (1022)
பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே. (1025)
என்னும் புறத்திணை நூற்பாக்களில் இவை இறுதியில் நிற்பதோடுää பெருந்திணை கைக்கிளை என முறை மாறியும் அமைகின்றது.
தொல்காப்பிய திணைவரிசை முறைகள்
முதற்பொருள் - முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை
உரிப்பொருள் - குறிஞ்சி பாலை முல்லை நெய்தல் மருதம்
புறத்திணை - குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை பெருந்திணை கைக்கிளை
அகம் - கைக்கிளை நடுவன் ஐந்திணை பெருந்திணை
இலக்கணம் உரைத்தல் - நடுவன் ஐந்திணை கைக்கிளை பெருந்திணை
இவ்வரிசை முறையைக் காணும்போது திணைகளை வரிசைப்படுத்தும் நோக்கில் தொல்காப்பியர் கூறவும் இல்லை. திணைகளுக்கு வரிசைமுறை என்ற வரண்முறையையும் அவர் சொல்லவில்லை என்பது புலனாகிறது. சொல்லிய முறை என்ற தொடருக்கு உரைகண்டவர்கள் தான் வரிசைமுறையைப் புகுத்துகிறார்கள் என்பது உணரத்தகுந்தது. பின்வரும் தொகை நூல்களிலும் இலக்கணங்களிலும் இலக்கியங்களிலும் ஐந்திணையின் வரிசை முறை எவ்வகையில் அடங்கும் என்பதனை இது காட்டும்.
தொல்காப்பியம் - முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை
அகம். - பாலை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்
ஐங். - மருதம் நெய் குறி பா முல்
கலித். - பா குறி மரு முல் நெய்
ஐந்திணை எழுபது - குறி முல் பா மரு நெய்
ஐந்திணை ஐம்பது - முல் குறி மரு பா நெய்
திணைமாலை நுற். - குறி பா முல் மரு நெய்
கைந்நிலை - குறி பா முல் மரு நெய்
மதுரை. - மரு முல் குறி பா நெய்
பெரும். - பா குறி முல் மரு நெய்
சிறுபாண். - நெய் முல் மரு -- --
புறநாணூறு - மரு முல் நெய் குறி
இறையனார் அகப். - குறி நெய் பா முல் மரு
வீரசோழியம் - முல் குறி மரு பா நெய்
நம்பி அகப். - குறி பா முல் மரு நெய்
மாறனகப்பொருள் - குறி பா முல் மரு நெய்
இலக்கண விளக்கம் - குறி பா முல் மரு நெய்
சிலப்பதிகாரம் - குறி மரு முல் நெய்
பெரியபுராணம் - குறி முல் மரு நெய்
இராமாயணம் - குறி பா முல் மரு
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே என்றது மாயோன்ää காடு முல்லை எனவும் சேயோன்ää மைவரை குறிஞ்சி எனவும் வேந்தன்ää தீம்புனல் மருதம் எனவும் வருணன்ää பெருமணல் நெய்தல் என்ற வரிசை முறையால் சொல்லப்படும் என்பது தொல்காப்பியர் கருத்து என்பது புலப்படுகிறது.
திணைகள் குறியீடு பெறுதல்
மேற்சொன்ன கருத்துக்களில் திணை வரிசை முறை தொல்காப்பியத்திலும் மற்ற இலக்கியங்களிலும் பின்பற்றப்படவில்லை என்றாலும் திணைகள் குறியீட்டு முறையில் பெயர் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.
சொல்லவும் படுமே என்பது எதிர்மறை உம்மை என்பர் உரையாசிரியர்கள். முல்லை என்ற குறியீட்டாலேயே திணைகளைச் சொல்லவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. காடு நாடு மலை கடல் என்பதே பெருவழக்கு என்று விளக்கம் தருவார் இளம்பூரணர். அக்கருத்து பொருந்துவதாக இல்லை. முல்லைத் திணையின் முதல்ää கருää உரிப்பொருள் என்று கேட்பதே இலக்கண வழக்கு. காட்டின் முதல்ää கருää உரி என்று கேட்பது வழக்கில்லை. காடு முதலான நிலங்கள் ஆட்சிக்குரிய பொதுச் சொல் ஆகாது. காடு என்பது அதனைச் சார்ந்துள்ள பகுதிகளைக் குறிக்காது. காட்டையும் அதனைச் சார்ந்துள்ள பகுதியினையும் குறிக்க ஒரு குறியீடு தேவைப்பட்டது. அதன் குறியீடாக முல்லை என்பதனை அமைத்தார் தொல்காப்பியர். அதனைப் போன்றே பிற திணைகளின் குறீடுகளாக அதன் பெயர்கள் அமைந்தன.
இளம்பூரணரின் கூற்றுப்படி காடு எனினும் முல்லை எனினும் ஒன்றானால் காரும் மாலையும் காடு என்பதும் கூதிர் யாமம் மலை என்பதும் பொருந்துமா? அங்ஙனம் கொண்டால் திணைக்குப் பொழுது என்றாகாமல் நிலத்திற்குப் பொழுதுகளாக அமைந்துவிடும். நிலமும் பொழுதும் முதற்பொருள் என்ற நிலை மாறி நிலத்துக்குள் பொழுது என முரணாக முடியும். ஆகவே திணையின் குறியீடுகளாகத்தான் குறிஞ்சி முதலான பெயர்கள் அமைகின்றன என்பது தெளிவாகின்றது.
திணைகளின் பெயர்கள்
ஒவ்வொரு திணைக்கும் உரிய குறியீடுகள் தான் குறிஞ்சி முதலானவை என்று கண்டோம். அதே நேரத்தில் அத்திணைக்கு அப்பெயர்கள் வரக் காரணம் என்பதை ஆயவேண்டியது கடமையாகிறது. அந்த வகையில் கை என்பது சிறுமைää கிளை என்பது உறவுää கைக்கிளை என்றால் சிறுமையான உறவு என்றும் அன்பின் ஐந்திணைகள் அந்நிலத்தின் சிறப்புடைய மலர்களின் பெயர்களைப் பெறுகின்றன என்றும் பெருந்திணை என்பது பொருந்தாத காமம் என்றும் பொருள் கொள்ளுகின்றனர் சான்றோர்.
கைக்கிளை என்பது ஒருதலை உள்ளுதல் என்னும் பொருளையும் குறிக்கும். அதாவது ஒருதலையாகக் காதல் கொள்ளுதல். தலைவன்ää தலைவி இருவரின் ஒத்த அன்பின்மையின் இது சிறுமையாக கொள்ளப்படும். பொதுவாக எல்லாக் காதலும் ஒருதலையாகத் தோன்றி பின்னர் அன்பின் ஐந்திணையாக மலரும். அப்படி அன்புடைமையாகாத வரையில் சிறுமையான உறவு என்பது பொருத்தமாக அமையும்.
அன்பின் ஐந்திணைகளின் பெயர்கள் அத்திணையில் சிறப்புடைய மலர்களின் பெயர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது பொருந்துவதாக இல்லை. ஏனெனில் குறிஞ்சிää முல்லைத் திணைகள் மட்டுமே மலரால் சிறப்பு பெற்றவை. மருதம் மரத்தின் பெயர் பெற்றது. நெய்தல் மலரின் பெயரோää மரத்தின் பெயரோ பெற்றதல்ல. ஒரு வேலை நெய்தல்ää மருதம் இரண்டும் மலர் உடையது என்று வலிந்து பொருள் கொண்டாலும் பாலைக்கு மலரின் பெயரும் மரத்தின் பெயரும் திணிக்க முடியாது. அப்படி இருக்க மலரின் பெயரோ அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளின் பெயரோ ஒரு திணைக்கு வழங்கப்பட்டிருக்க முடியாது.
குறிஞ்சி முதலான திணைகளின் பெயர்களின் பொருளைக் காணும்போதும் அவற்றின் உரிப்பொருளை நோக்கும்பொழுதும் ஓருண்மை புலப்படுகின்றது. அதாவது குறிஞ்சி என்றால் குறுகுதல் என்று பொருள். குறுகிய மனப்பான்மை கொண்ட என்னும் பொருள்படும். சங்க இலக்கியங்களில் மலை நாட்டுத் தலைவன் தலைவியை புணர்ந்து பின்னர் பிரிந்து செல்லுதலை ஒருவாறு குறிக்கும். முல்லை என்றால் முல்லுதல் என்று பொருள். பிரிந்து சென்ற தலைமகனை நினைத்துக்கொண்டே இருத்தலாகும். ஆற்றி இருத்தல் என்னும் உரிப்பொருளோடு தொடர்புடையது. மருதம் என்றால் மருவுதல் என்று பொருள். பரந்து விரிந்து நிறைந்திருத்தல் எனப்படும். நெய்தல் என்பது நெய்வது ஆகும். வலை நெய்தல் என்று பொருள் கொள்ளவேண்டும். பாலை என்பது பற்றுதல் என்னும் பொருளை தரும். பற்றுதல் என்பது கைப்பற்றுதல் அதாவது சிறுமையாகக் கைப்பற்றுதல் (வழிபறி) எனப்படும்.
இவ்வாறு வழங்கப்பட்ட பொருளுடைய குறியீடுகள் திணைகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் அத்திணைகளின் பெயர்கள் அதன் சிறப்பு கருதி அத்திணையின் கருப்பொருளில் ஏதேனும் ஒன்றுக்கு வழங்கி வந்தது. அதாவது குறிஞ்சி என்னும் திணையின் பெயர் அங்கு சிறப்பு பெறும் பொருளைக் (மலரை) குறித்தது. முல்லை என்னும் திணையின் பெயர் அத்திணையின் சிறப்புடைய பொருளைக் (முல்லைக்கொடியை) குறித்தது. மருதம் என்னும் திணைப்பெயர் அதன் சிறப்பான பொருளைக் (மரம்) குறித்தது. நெய்தல் என்னும் திணையின் பெயர் அத்திணையின் சிறப்பான தொழிலைக் (நெய்வது) குறித்தது. பாலை என்னும் திணைப்பெயர் அந்நிலத்தின் தொழிலை (கைப்பற்றல்) குறித்தது.
பெருந்திணை என்பது பெருமை வாய்ந்த திணை எனப்படும். பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் எனின் அதனை ஆசிரியர் உரைக்கத் தேவையில்லை. ஒருதலையாக உள்ளி பின்னர் அன்பின் ஐந்திணையாக மலர்ந்து கற்பு என்னும் பெருமை வாய்ந்த திணையாக ஏற்றம் அடைவது பெருந்திணையாகும்.


நாள் : 15-Sep-14, 3:58 pm

மேலே