எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விடிய விடிய தூக்கமின்றி வெளிநாட்டுக்காரனுக்கு கணினியில் வேலை..! விடிந்தப்பிறகு...

விடிய விடிய
தூக்கமின்றி
வெளிநாட்டுக்காரனுக்கு
கணினியில் வேலை..!
விடிந்தப்பிறகு
விடிந்துவிட்டதே என்று
உறங்காமல்
எழுதுகிறேன் சில கவிதை...!
எழுதிய கவிதைகளுக்குள்
சிக்கிய மூளையினை
சீர்ப்படுத்துவதற்குகள்
கடன்காரனின் அழைப்பு.
கடன்காரனுக்கு
நாட்களை அடகுவைத்து
தவணை கேட்டு
ஓடோடி
அவன் இவனிடம்
கெஞ்சி கொஞ்சி
கேட்டுபெற்ற
காசோலையோடு
வங்கியின் வாசலில்
நிம்மதி மூச்சுவாங்கி
மனதை
ஆசுவாசபடுத்தினால்
இம்சை செய்கிறது
கல்யாண கனவு.
கனவு நிறைவேற
கன்னிகளை என்
கண் தேடுகிறது...!
தேடிய பெண்களை
நாடினால்
என் வயதினை கணித்து
” அண்ணா “ என்று
அவர்கள் அழைத்திட...
பாசமலர்களை
சுமந்துக்கொண்டு
என் பாவத்தை
குறைத்துகொண்டு
வழியும் கண்ணீரை
வியர்வை என்று
எனக்கே நானே ஆறுதல்சொல்லி
உடல், மன அசதியோடு
படுக்கையை தேடும்போது
மணி இரவு 9.
இரண்டாம் நிலை
உறக்கத்திலிருக்கும் போதே
அலுவல் வேலைகள்
எச்சரிக்க.....
மீண்டும்
வெளிநாட்டுக்காரனுக்கு
கணினியில் வேலை.

இப்படியாக
கடக்கும் என் நாளில்
இரவு பத்துமணிக்கு
ஓர் அழைப்பு.
“ சாப்பிட்டீயா டா “
செல்பேசியில்
அம்மாவின் குரல்.
அந்த தெய்வீக குரலில்
மொத்த துக்கமும்
ஏமாற்றங்களும்
வலிகளும்
அந்த நொடியில் பறந்து
அடுத்த நொடியில்
புத்துணர்ச்சியோடு நான்............!


-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 20-Sep-14, 8:24 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே