படித்ததில் பிடித்தது.! சகோதரியை பலாத்காரம் செய்தவர்களைக் கொன்று பழி...
படித்ததில் பிடித்தது.!
சகோதரியை பலாத்காரம் செய்தவர்களைக் கொன்று பழி வாங்கிய புரூஸ்லி,பதினான்கு வருடங்கள் கழித்து போன மாதம்தான் விடுதலையானார்.
உப்பு காரத்தைத் தவிர்த்துவிடுகிறார்.உடற்பயிற்சிகளில் சிறந்தது நடைப் பயிற்சியே என்கிறார்.முன்போல உணர்ச்சி வசப்படுவதில்லை.சாதுவாக நடந்து கொள்கிறார்.பிரச்சினைகளை நிதானமாகக் கையாள்கிறார்.தூங்கும் புத்தனை வணங்கி வருகிறார்.அண்ணன் மகளுக்கு நிஞ்சாக் கட்டைகளில் கயிற்றை இணைத்து,ஸ்கிப்பிங் விளையாடக் கொடுத்துவிட்டார். டீ ஷர்ட்டுகளை அணிவதில்லை.முழுக்கை ஜிப்பா மட்டும்தான். விபத்துகளைப் பார்க்க நேர்ந்தால்,முற்றத்தில் கால்களைக் கழுவிக்கொண்ட பின்பே வீட்டுக்குள் நுழைகிறார். ஆனால்..,அவர் அக்கரமங்களைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருப்பதில்லை. நடுஇரவில் எழுந்து கொள்கிறார்.நயவஞ்சகர்களின் முதுகுத்தோலை உரித்தெடுக்கும் நான்கைந்து வரிகளை பதிவிட்ட பின்னரே படுக்கைக்குப் போகிறார்.
-எழுதியவர் -கவிஞர் ஜான்சுந்தர்.
தொகுப்பு-சொந்த ரயில்காரி