மங்கள்யான் விண்கலம் இந்தியாவின் வரலாற்று சாதனை முதல் முயற்சியிலேயே...
மங்கள்யான் விண்கலம் இந்தியாவின் வரலாற்று சாதனை
முதல் முயற்சியிலேயே மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது நமது இந்தியா. மற்ற நாடுகளைக்காட்டிலும் மிக குறைவான செலவிலேயே நமது விஞ்ஞானிகள் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மங்கள்யான் சாதனைக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.