பசுமையை மறந்துவிட்டு ... பறந்து செல்லும் பறவைகளே... கொஞ்சம்...
பசுமையை மறந்துவிட்டு ...
பறந்து செல்லும் பறவைகளே...
கொஞ்சம் திரும்பி பாருங்களே...
நீங்கள் திரும்பாமல் செல்வதால்..
திறக்க முடியவில்லை பல அணைகள்...
நீரில்லாமல் தவிக்கிறது வயல் வெளிகள்..
வாரி வாரி கொடுக்கிறான் என்று வரிசையில் போய் நிற்கிறீர்கள் ...
வானம் பார்த்து வளர்ந்த பூமியை வளமில்லாத நாடு என முத்திரை குத்துகிறீர்கள் ...
வாழ்க்கையில் என்றுமே துன்பம் வந்துவிடாது ...
வயலை நம்பி வாழ்ந்தால் வாழ்வில் துன்பம் கிடையாது..
வயதில் முதிந்தவன் நான் வளமாய் இருக்கிறேன் ...
வரிந்து கட்டிக்கொண்டு வருகிறீர்களா உங்களுக்கும் சொல்லித்தருகிறேன்...
வாரி வாரி தரும் மண்ணின் விளைச்சலை கற்று கொடுக்கிறேன்....
தமிழர்களுக்கும் ..
தமிழ் நண்பர்களுக்கும் ...
இனிய காலை வணக்கம்...