ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது கர்நாடக உயர்நீதிமன்றம் திருத்தப்பட்ட...
ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது கர்நாடக உயர்நீதிமன்றம்
திருத்தப்பட்ட செய்தி: ஜாமீன் மனு ரத்து
அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்காத காரணத்தால், ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அவருடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது. இதனால், அதிமுகவினர் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு நிர்வாகத்தினரும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
அரசுத் தரப்பு வழக்குரைஞர் பவானி சிங், ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குவதைத் தான் எதிர்க்கவில்லை எனக் கூறினார். இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஜெயலலிதாவின் 11 நாள் சிறைவாசம், முடிவுக்கு வந்துள்ளது. அவர் விரைவில் தமிழகத்திற்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.